பாஜக தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பாதையில் ஒரு பாலத்துக்கு அடியில் பயங்கர ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு கண்டறியப்பட்டு, உரிய நேரத்தில் அகற்றப்பட்டது.
மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி என்ற கிராமத்தில் தரைப்பாலத்தில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது.
மதுரை- டி.கல்லுப்பட்டி இடையிலான இந்தப் பாதையில் பிளாஸ்டிக் குழாயில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து நிரப்பப்பட்டு, ஒயர் மூலம் பேட்டரி-கடிகாரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது.
அத்வானி இன்று காலை இந்த வழியாக செல்லும் முன் பாதையை முழுமையாக ஸ்கேன் செய்த தேசிய பாதுகாப்புப் படையின் கமாண்டோக்கள் இதைக் கண்டுபிடித்து அகற்றினர்.
இந்த குண்டை செயலிழக்கச் செய்வதற்காக நெடுந்தூரம் கொண்டு செல்லப்பட்டது.
இந்தப் பாதையில்தான் அத்வானி இன்று மதுரையிலிருந்து நெல்லை செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?