மின்சாரம் கட் ஆகி டிவி பார்க்க முடியாத கோபத்தால், ஆட்சியே மாறியதை அறிவீர்கள்.. மின்சாரம் அந்த அளவுக்கு நம்முடன் இணைந்து போய் இருக்கிறது..
அனல் மின் நிலையம், புனல் மின் நிலையம் , காற்றாலைகள் ( கொஞ்சூண்டு சூரிய மின் சக்தி ) என்றெல்லாம் மின்சாரம் உற்பத்தியாகிறது... அதிக பட்ச மின்சாரத்தை, குறைந்த பட்ச எரிபொருளை பயன்படுத்தி தயாரிக்க ஒரே வழி அணு மின் உலைகள்தான் என்கின்றனர் சிலர். அது என்ன குறைந்த பட்ச எரி பொருள்..?
அனல் மின் நிலையங்கள் என்றால் நிலக்கரி எரி பொருள்.. கிலோக்க்கணக்கில் கரியை எரித்து கிடைக்கும் மின் சாரத்தை அதை விட குறைந்த அளவேயான யுரேனியம், தோரியம் போன்றவற்றில் இருந்து பெறலாம் .. அளவும் குறைவு, சீர்கேடும் குறைவு என்பது இவர்கள் வாதம்...
நிலக்கரி தோண்ட தோண்ட கிடைத்து கொண்டே இருக்காது, கொஞ்ச நாளில் தீர்ந்து விடும்.. எனவே அணு மின் சாரம் காலத்தின் கட்டாயம்... வளர்ந்த நாடுகளில் அணு மின்சாரம் அவர்கள் மின் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்கிறது , என்றெல்லாம் இவர்கள் சொன்னாலும், சிலர் கடுமையாக எதிர்கிறார்கள்...
இது குறித்து பத்திரிக்கையாளர் , விமர்சகர் ஞானியிடம் சில கேள்விகளை முன் வைத்த போது அவர் அளித்த பதில்கள்
_____________________________________________________
- அணு உலை என்பதே கூடாது என்பது உங்கள் நிலைப்பாடா அல்லது இந்தியாவில் அது கூடாது ( திறமையின்மை, பாதுகாபின்மை போன்றவற்றால்) என்பது உங்கள் நிலைப்பாடா? பாதுகாப்பான முறையில் அமைக்கப்படும் அணு உலையை ஏற்கிறீர்களா? எப்படியும் நமக்கு மின்சாரம் தேவை .. காடுகளையும், சுற்றுபுற தூய்மையையும் அழிக்காமல் , மின் உற்பத்தி செய்ய ஒரே வழி அணு சக்திதான் என்கிறார்களே..
- 53
- பாதுகாப்பான முறையில் அணு உலை என்பதே கிடையாது. அணுக்கழிவுகளை கதிர்வீச்சு நீங்கச் செய்ய இதுவரை தொழில்நுட்பம் இல்லை. அவை பல்லாயிரக்கணக்கான் ஆண்டுகள் இருந்து ஆபத்தை ஏற்படுத்துபவை. எல்லா அணு உலைகளையும் நான் எதிர்க்கிறேன். அணுசக்தி தூய வழி என்பது தவறு. அது உண்மையல்ல.
- அணுகுண்டுக்கான மூலப்பொருள் உருவாக்கும் முயற்சியாகவே அணு உலைகள் உருவாக்கப்பட்டன. அதன் உப பொருளே மின்சாரம். அதை முகமூடியாகக்காட்டி அணு ஆயுதம் தயாரிக்கத்தொடங்கினார்கள். இப்போது முகமூடி தேவை இல்லை. ஆனால் அணு உலை தயாரிப்புத்தொழிலின் லாபியினால் அவை நம் தலை மீது கட்டப்படுகின்றன.
- அப்படி பார்த்தால், வளர்ந்த நாடுகளில் அதை தடை செய்து இருப்பார்களே.. ஆனால் அங்கும் அணு சக்தி உள்ளதே...
- 4
- வளர்ந்த wநாடுகள் ஒவ்வொன்ராக இவற்ரைக் கைவிட்டு வருகின்றன. கடைசியாக இப்போது பிரான்ஸ் மொத்த மின்சக்தியில் 25 சதவிகிதத்தை அணு உலையிலிருந்து பெறும் நாடு. அனைத்தையும் 2050க்குள் மூடுவது என்று முடிவு எடுத்துவிட்டது. நாம் அணுமின்சாரம் பெறுவது வெறும் 2.75 சதவிகிதம்தான். இது 10 சதவிகிதம் ஆவதற்கே 2050 ஆகிவிடும் என்கிறார்கள்.
- கார்பன் வெளியேற்ரம், சுற்று சூழல் சீர்கேடு என்ப்தற்கு கிடைக்கும் ஒருமித ஆதரவு , அணு சக்தி எதிர்ப்புக்கு இல்லையே... கட்சிகள் கூட இதை உறுதியாக எதிர்ப்பதில்லையே.. இதற்கு காரணம், அணு சக்திமேல் இருக்கும் அச்சம் என்பது அறிவியல் பூர்வமானது அல்ல என எடுத்துக்கொள்ள முடியுமா?
- பெரும்பாலான கட்சிகள் அணுகுண்டையே ஆதரிப்பவை. குண்டை ஆதரிக்காத கட்சிகள் அணுவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது என்ர பிரசாரத்தில் நீண்ட காலமாக ஆழ்ந்துபோய்விட்டார்கள். அணுக் கழிவு, கதிர்வீச்சு பற்றியெல்லாம் போதுமான அறிவு இல்லாமையே பல அரசியல் கட்சிகளின் தெளிவற்ற நிலைக்குக் காரணம். அணு சக்தி பற்றிய அச்சம் முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமானது. அதைப் பற்றிய அச்சமின்மைதான் அறிவியல்பூர்வமில்லாதது.
- யாரேனும் போராட்டம் நடத்தினால் ஆதரவு தருவீர்களா?
- யாரேனும் மனித சங்கிலி போன்று ஏற்பாடு செய்தால் நிச்சயம் பங்கேற்பேன். இடிந்தகரைக்கு செல்ல விரும்பினேன். உடல்நலம், வேறு வேலை பளுவினால் செல்ல இயலவில்லை. 1988 89ல் இடைந்தகரையில் இதே போல ஒரு பெரும் திரளான மீனவர்கள் முன்புகூடன்குளம் திட்டம் ஏன் கூடாது என்பது பற்றி பேசியிருக்கிறேன். அப்போது அணு எதிர்ப்பு இயக்கம் ஒன்றை நான், நாகார்ஜுனன், ரவி ஸ்ரீனிவாஸ் இன்னும் பல நண்பர்கள் சேர்ந்து சிறிய அளவில் செய்துகொண்டிருந்தோம்.
- அதிகரித்து வரும் மின் தேவைக்கு வேறு எப்படித்தான் சந்திப்பது.. அனல் மின நிலையங்களால் சுற்றுசூழல் சீர்கேடு ஏற்படும். தவிர அதன் எரிபொருள் ஆதாரம் தீர்ந்து கொண்டே வருகிறது.. காற்றலை, நீர் மின் நிலையங்கள் போன்றவை எல்லாம் பெரிய அளவில் பயன்படாது... அணு சக்திக்கு மாற்று என்ன?
- முதலில் அணு மின்சக்தி எதற்கும் மாற்று இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இப்போது அணுமின்சக்தி வெறும் 2.75 சதவிகிதம்தான். இப்போதே காற்று, சூரியசக்தி இந்தியாவில் 5 சதவிகிதம் ! அவை பெரிய அளவில் பயன்படாது என்பது தவறான பிரசாரம். அணு சக்திக்கு செலவிடும் தொகையில் பத்தில் ஒரு பங்கு கூட செலவிடாமலே, அவை அதிகம் தருகின்றன. நான் கடத முப்பது ஆண்டுகளாக அணு உலைகள் எதிர்ப்பில் ஈடுபட்டிருக்கிறேன். அவை பற்றி தொடர்ந்து படிக்கிறேன். i am fully convinced. alternatives are possible by several methods.
http://tamil-sexygirls.blogspot.com
http://tamil-sexygirls.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?