படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒருவர் குட்டி ஜமீன்தார் மாதிரி இருப்பார். முறுக்கிய மீசை, சுருள்முடி கொண்ட தோற்றம். இவர் 100 சதவிகிதம் நல்லவர். அடுத்த ரஜினி தாதா மாதிரி தலையில் கட்டிய ரிப்பன், பரட்டை தலை, விதவிதமா உடைகள் கொண்ட கேரக்டர். இவர் 25 சதவிகிதம் நல்லவர் 75 சதவிகிதம் வில்லன். *
கதை: 50 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமான தண்ணீர் பஞ்சம் வருகிறது. அதை போக்குவதற்காக ஊர் பண்ணையார் ரஜினி தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே அணை கட்டுகிறார். ஊர் செழித்தால் தங்கள் பிழைப்பு போய்விடும் என்று கருதும் சமூகவிரோத கூட்டம் அணை கட்டும் ரஜினி பற்றி தவறான செய்திகளை ஊருக்குள் பரப்புகிறது. அதை நம்பும் ஊர் மக்கள் ரஜினியை தூற்றுகிறார்கள். இதனால் மனம் வருந்தும் ரஜினி அணையை கட்டிவிட்டு ஊரைவிட்டே சென்று விடுகிறார். அதன் பிறகு அணையை மக்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். அணை கட்டிய ரஜினியை அவமானப்படுத்தியதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கருதும் மக்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். அவர் வந்ததும் என்ன நடக்கிறது என்பது ஒரு கதை. *
அடுத்து இன்னொரு ரஜினியின் கதை. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அடிதடி, திருட்டு, கடத்தல் என வாழும் தாதா ரஜினி. அவரை போலீஸ் வலைவீசி தேட அணையில் வந்து மறைந்து தலைமறைவாக இருக்கிறார். அப்போதான் அந்த அணைக்குள் ஒரு கூட்டம் ஒழிந்து இருந்து அந்த வழியாக வருகிறவர்களிடம் வழிப்பறி செய்வது, கொலை செய்வது பெண்களை மானபங்கபடுத்துவது போன்ற காரியங்களை செய்து வருவது தெரிகிறது. அணையை காப்பாற்ற வந்த பெரியவர் ரஜினியும், அணையில் பதுங்க வந்த வில்லன் ரஜினியும் இணைந்து எப்படி அணையை மீட்டு மக்களை காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?