போட்டியில் அந்த அணி விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி ஆட்டத்தில் சதம் எடுத்த ரோகித் சர்மா முதல் 3 போட்டிகளுக்கு இல்லை. அதே போல் பந்து வீச்சில் மொகமது ஷமி, புவனேஷ் குமார் இல்லை. எனவே இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோரிடையே போட்டி நிலவும் என்பது இயற்கை.
ரெய்னாவின் 200வது ஒருநாள் போட்டி:
தோனி இல்லாத நிலையில் பினிஷிங் பொறுப்பு தலையில் விழுந்துள்ள சுரேஷ் ரெய்னா 200வது ஒருநாள் போட்டியில் நாளை களமிறங்குகிறார். இவர் 44 ரன்களை எடுத்தால் 200வது போட்டியில் 5000 ஒருநாள் போட்டி ரன்களை எட்டுவார்.
சங்கக்காரா:
இலங்கை அணியில் மேட்ச் வின்னர் சங்கக்காரா என்றால் மிகையாகாது. இந்த ஆண்டில் 18 ஒருநாள் போட்டிகளில் 728 ரன்களை குவித்து சரியான பார்மில் உள்ளார். ஆனால்.. இவர் இந்த அவசரத் தொடர் குறித்து விமர்சனன் வைத்ததும் அவர் ஆட்டத்தைப் பாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இலங்கை அணியில் மலிங்கா இல்லை. எனவே பந்து வீச்சு நுவன் குலசேகரா, திசர பெரேரா, தம்மிக பிரசாத் ஆகியோர் கையில் உள்ளது. மேத்யூசும் சிக்கனமாக வீசுபவரே.
புள்ளி விவரங்கள்:
இந்தியாவில் இதுவரை 8 இருதரப்பு ஒருநாள் தொடர்களில் இலங்கை விளையாடியுள்ளது. இதில் 1997-98- தொடரில் 1-1 என்று டிரா செய்ததே அதன் சிறப்பான தொடர். மீதி 7 தொடர்களில் இந்தியா இலங்கையை வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிராக இந்தியாவில் நடந்த இருதரப்பு ஒரு நாள் தொடர்களில் இந்தியா எந்தத் தொடரிலும் 1 போட்டிக்கு மேல் தோற்றதில்லை.
Tags : இந்தியா-இலங்கை ஒருநாள் போட்டித் தொடர் 2014, விராட் கோலி, மேத்யூஸ், மலிங்கா, சங்கக்காரா, ரெய்னா, கிரிக்கெட்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?