வேலூர் ஜெயிலில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 6 பேர் உடல் நிலை ஆய்வு Murugan Santhan Perarivalan health research in Vellore jail
வேலூர், பிப்.19–
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
7 பேரையும் விடுதலை செய்வதாக இன்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் ராஜவேலு, ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் வேலூர் ஆண்கள் ஜெயிலுக்கு சென்றனர்.
அவர்கள் அங்கு ராஜீவ் கொலை கைதிகள் 6 பேர் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து வருவதாக சிறைதுறை வட்டாரங்கள் தெரிவித்தன. முதலில் பேரறிவாளன் உடல் நிலை பரிசோதிக்கபட்டதாக கூறப்பட்டது.
இதே போல் வேலூர் ஜெயிலில் குண்டடி காயம்பட்ட தீவிரவாதி பன்னா இஸ்மாயில் அடைக்கபட்டுள்ளான். அவனது உடல் நிலையையும் பரிசோதிக்க டாக்டர்கள் குழுவினர் சென்றதாக தெரிவித்தனர்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?