Today comedy : ஊழலற்ற ஆட்சிக்கு உத்தரவாதம் அளித்ததால் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு: ஷிண்டே Shinde says that Congress supporting for AAP as promised a non corrupt government
பெங்களூர், டிச. 14-
டெல்லியில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இந்த ஆதரவை ஏற்பது பற்றி முடிவு செய்வதற்கு முன்பாக, தனது பிரச்சாரத்தின்போது முன்வைத்த வாக்குறுதிகள் மற்றும் டெல்லியின் தான் எழுப்பிய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக காங்கிரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆதரவு கொடுத்தபோதும் ஆட்சியமைக்காத அரவிந்த் கெஜ்ரிவால் மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முன்வந்தது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்திற்கு வந்து, தூய்மையான அரசை வழங்க விரும்பியது. தூய்மையான மற்றும் ஊழலற்ற அரசாங்கம் பற்றி பேசியதால் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடிவு செய்திருக்கிறது.
இந்த வாய்ப்பை ஆம் ஆத்மி கட்சி நிராகரித்தால் அரசியலமைப்பு அதிகாரம் அதன் மீது முடிவு எடுக்கும். ஆம் ஆத்மி உறுப்பினர்கள் கவர்னரை சந்தித்த பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும். இதுதொடர்பாக கவர்னரை நான் சந்தித்து ஆலோசிக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
...
Shinde says that Congress supporting for AAP as promised a non corrupt government
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?