Img நடிகை ராதாவிடம் மோசடி: தொழில் அதிபர் பைசூல் பாஸ்போர்ட் முடக்கம் Actress Radha and cheating entrepreneur passport confiscate faizal
'சுந்தரா டிராவல்ஸ்', 'அடாவடி', 'மானஸ்தன்' உள்ளிட்ட படங்களில் நடித்த ராதா சினிமா பைனான்சியர் பைசூல் மீது பரபரப்பான புகார் கூறினார். ஐந்து ஆண்டுகள் இருவரும் கணவன்–மனைவியாக வாழ்ந்தோம் என்றும் தற்போது தன்னிடம் ரூ.50 லட்சத்தை மோசடி செய்து விட்டார் என்றும் பைசூல் மீது ராதா குற்றம் சாட்டி உள்ளார்.
படுக்கையறை காட்சிகளை படம் பிடித்து மிரட்டுவதாகவும் கூறினார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இது தொடர்பாக மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரினார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைசூலிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ராதா தன் மீது பொய் குற்றச்சாட்டு கூறுகிறார் என்றார்.
ராதா பற்றிய ரகசியங்களை விரைவில் வெளியிடுவேன் என்றும் அறிவித்தார். போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க சென்னை செசன்ஸ் கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு இரண்டு முறை மனு தாக்கல் செய்தார். அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து ராதா மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனரிடம் மீண்டும் புகார் அளித்தார். பைசூல் சாட்சிகளை கலைக்கவும், என் மேல் பொய் புகார் அளிக்கவும் முயற்சிக்கிறார் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் வடபழனி போலீசார் நேற்று பைசூலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். பைசூல் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை முடக்கினர். பைசூல் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். பைசூலை விரைவில் கைது செய்யவும், தீவிரம் காட்டுகிறார்கள். அவர் தலைமறைவாக இருக்கும் இடத்தை கண்காணித்து வருகிறார்கள். சில தினங்களில் பைசூல் கைதாவார் என போலீசார் தெரிவித்தனர்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?