Img இமாலய வெற்றிக்கு நரேந்திரமோடி அலையே காரணம்: வசுந்தராராஜே பெருமிதம் Rajasthan bjp win Narendra Modi reason VASUNDHARA RAJE
ஜெய்ப்பூர், டிச 8–
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 199 இடங்களில் பா.ஜனதா 137 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.
ராஜஸ்தான் தேர்தலில் பா.ஜனதாவின் இமாலய வெற்றிக்கு நரேந்திர மோடி அலையே காரணம் என்று வசுந்தரா ராஜே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–
நரேந்திர மோடியின் அலைதான் இந்த தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தது. குஜராத்தில் அவரது செயல்பாட்டை மக்கள் பார்த்து இருக்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலுக்கு இது எங்களது அரை இறுதி போன்றது. முடிவு நாங்கள் எதிர்பார்த்த மாதிரியே வந்தது. இந்த முடிவு மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலும் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்துக்கு வசுந்தராராஜே மீண்டும் முதல்–மந்திரியாகுகிறார். அவர் 2003–ம் ஆண்டு முதல் 2008–வரை முதல் – மந்திரியாக இருந்தார். தற்போது 2–வது முறையாக முதல்–மந்திரியாகுகிறார்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?