Img டெல்லி தேர்தலில் ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் Arvind Kejriwal defeated Sheila Dikshit
புதுடெல்லி, டிச. 8-
டெல்லியில் 90 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது. இதற்கு அடுத்தப்படியாக ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளனர். மூன்று முறையாக ஆட்சி செலுத்தி வரும் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை தழுவி வருகிறது.
புது டெல்லி தொகுதியில் முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிபெற்றுள்ளார். அவர் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஷீலா தீட்சித்தை தோற்கடித்துள்ளார்.
இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், இந்த தேர்தலின் வெற்றி மக்களின் வெற்றியாகும். நாங்கள் எந்த கட்சியின் ஆதரவையும் கோரப்போவதில்லை. அதேபோல் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளரான ஹர்ஷ வர்தனும் வெற்றிபெற்றுள்ளார்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?