Tuesday, 31 December 2013

பதவியில் இருந்து மன்மோகன் சிங் விலகலா? Manish tevari rufutes rumour of Manmohan singh quitting PM post

Manish tevari rufutes rumour of Manmohan singh quitting PM post

பதவியில் இருந்து மன்மோகன் சிங் விலகலா?: மத்திய மந்திரி திட்டவட்ட மறுப்பு Manish tevari rufutes rumour of Manmohan singh quitting PM post

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. மன்மோகன் சிங் செயல்படாத பிரதமர் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

பல தருணங்களில், மீண்டும் பிரதமர் ஆவதை நான் விரும்பவில்லை. பிரதமராக ராகுல்காந்தி பொறுப்பேற்றால் அவருக்கு வழி காட்ட தயராக இருக்கிறேன் என்று மன்மோகன்சிங் வெளிப்படையாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் இதை தெரிவித்து விட்டார்.

ராகுல்காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் பிரதம வேட்பாளர் என்று வரும் 17–ந்தேதி நடைபெறும் காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இதற்கென தனித் தீர்மானமும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பிரதமர் மன்மோகன்சிங் வருகிற 3–ந்தேதி பகல் 11 மணிக்கு அனைத்து பத்திரிகையாளர்களையும் சந்திக்கிறார். அன்றைய தினம் எதிர்கால திட்டம் பற்றிய முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த தகவலை மையமாக வைத்து பத்திரிகையாளர்களுடனான அன்றைய சந்திப்பின் போது தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக மன்மோகன் சிங் அறிவிப்பார் என்ற வதந்தி பரவத் தொடங்கியுள்ளது.

மேற்கண்ட யூகத்திற்கும், வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதுடெல்லியில் நேற்று பேட்டியளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி மணிஷ் திவாரி, பிரதமர் ராஜினாமா செய்கிறார் என்று வெளியாகும் யூகங்கள் தவறானவை என்று கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களை சந்திப்பதே இல்லை என ஊடகங்கள் குறை கூறி வந்தன. சரி, 2014-ம் ஆண்டு பிறக்கும் வேளையில் அவர்களை சந்திக்கலாமே என்று கருதிய பிரதமர், 3-ம் தேதி பேட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அன்றைய தினம் பதவி விலகப் போவதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என சில ஊடகங்கள் புரளியை கிளப்பி வருகின்றன. என்னைப் பொருத்த வரையில், இத்தகைய யூகங்களுக்கு எல்லாம் பதில் அளித்துக் கொண்டிருப்பது தேவையற்ற வேலை என்றே கருதுகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
...

Manish tevari rufutes rumour of Manmohan singh quitting PM post

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger