Tuesday 31 December 2013

2014ஆம் ஆண்டை முதலில் வரவேற்று கொண்டாடிய ஆஸ்திரேலியா: உலகம் முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் 2014 year first celebration Australia welcomed

Img 2014ஆம் ஆண்டை முதலில் வரவேற்று கொண்டாடிய ஆஸ்திரேலியா: உலகம் முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் 2014 year first celebration Australia welcomed

ஆக்லாந்து, டிச. 31-

உலகம் முழுவதும் நாளை தொடங்கவுள்ள 2014 ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடுவதற்கு தயாராகி வரும் நிலையில் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் புத்தாண்டு வாணவேடிக்கைகள் தொடங்கின. கிரீன்விச் நேரப்படி இன்று 11 மணியளவிலேயே அவர்களுக்குப் புத்தாண்டு பிறந்துவிடுவதால் கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கிவிட்டன.

2014ஆம் ஆண்டை முதலில் வரவேற்று கொண்டாடியது ஆஸ்திரேலியாவில்தான். இதையொட்டி சிட்னி நகரத்தில் பிரமாண்ட வாண வேடிக்கைகள் நடைபெற்றன. இங்கு பிரபலமாக நடைபெறும் வாணவேடிக்கைகளைக் கண்டு களிப்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர். ஜப்பானில் உள்ள ஷிண்டோ மதகுருமார்கள் புதிய ஆண்டை வரவேற்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உலக நாடுகள் பலவற்றிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. துபாய் நகரம் இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தில் ஒரு சாதனை படைக்கத் திட்டமிட்டுள்ளது. கடற்கரைக்கு முன்னால் 30 மைல் தொலைவிற்கு நீண்டு செல்லும் இந்த வாணவேடிக்கைகள் ஒரு கி.மீ உயரம் வரை செல்லுமென்று கூறப்படுகின்றது. இந்தக் கொண்டாட்டங்கள் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.

சீனாவின் பல நகரங்களிலும் பெரிய அளவிலான கொண்டாட்டங்கள் எதிர்பார்க்கப்படும்போது மோசமான பனிமூட்டம் காரணமாக வுஹான் நகரம் மட்டும் இந்தக் கொண்டாட்டங்களைக் கைவிட்டுள்ளது. ஐரோப்பிய நகரங்களான மாஸ்கோ, பாரிஸ், லண்டன் போன்ற நகரங்களிலும் பின்னர் கொண்டாட்டங்கள் நடைபெறும். தென் அமெரிக்காவின் கேப் டவுன் நகரில் கடந்த 5 ஆம் தேதி மறைந்த கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் லேசர் காட்சிகள், வாணவேடிக்கைகள் அடங்கிய ஒரு முப்பரிமாண சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரின் டைம் சதுக்கத்தில் எப்போதும்போல் பாரம்பரிய முறையிலான புத்தாண்டுத் துவக்கத்தினைக் குறிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வண்ணமயமான திருவிழாக்களுக்குப் பெயர்போன பிரேசில் இந்த ஆண்டும் கோபகபானா கடற்கரையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டை வரவேற்க 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger