Img ஓரினச் சேர்க்கை என்பது தனி நபர் சுதந்திரம்: ராகுல் காந்தி கருத்து Gay individual freedom Rahul Gandhi opinion
புதுடெல்லி, டிச.13-
ஓரினச் சேர்க்கையாளர்கள் சம்மதத்துடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது குற்றச்செயல் அல்ல என்று டெல்லி ஐகோர்ட்டு கூறிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் ரத்து செய்தது. இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றம். இதற்கு ஆயுள் தண்டனை வரை விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டு இருப்பது செல்லும் என்று தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் கருத்து தெரிவித்தார். நிருபர்களிடம் அவர் கூறும்போது,
''இந்த விவகாரம் தனி நபர் சுதந்திரம் என்று நான் உணர்கிறேன். நான் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவினை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த பிரச்சினைகளை தனிநபர் விருப்பத்திற்கே விட்டு விட வேண்டும். நமது நாடு சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதற்கு புகழ் பெற்றது'' என்றார்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?