Thursday, 12 December 2013

Tamils have been arrested in Singapore release Seeman enforcing

Tamils have been arrested in Singapore release Seeman enforcing சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல் Tamils have been arrested in Singapore release Seeman enforcing

சென்னை, டிச.13-

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிங்கப்பூரில் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பேருந்து விபத்து ஒன்றில் உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டம் சத்திரம்-சீகம்பட்டியைச் சேர்ந்த குமாரவேலின் மரணத்துக்கு நீதி கோரி, அதனை நேரில் பார்த்தவர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது சிங்கப்பூர் அரசு கொடும் அடக்குமுறையை ஏவியிருக்கிறது.

ஈழத்தின் தமிழினம் படுகொலை செய்யப்பட்ட போது ''ராஜபக்சே வென்றதாக நினைக்கலாம். ஆனால் தமிழர்களின் போராட்டத்தை அவ்வளவு எளிதாக ஒடுக்கிவிட முடியாது'' என எம் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தலைவர் லீ க்வான் யூ. ஆனால் இன்றைய அரசு அதே தமிழர்களை, அதிலும் உழைக்கும் மக்களை, கொடுமையாக அடக்குவதும் கடுமையான சட்டங்களின் அடிப்படையில் தண்டனை விதிப்பதும் பெரும் வேதனை அளிக்கிறது.

வெளிநாடுகளில்தான் இந்தநிலை என்றால், இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள கேரளத்தின் அட்டப்பாடியில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தமிழர்களை அவர்கள் வாழ்ந்து வந்த நிலத்தை விட்டு கேரள அரசு துரத்துகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லும் கேரள அரசு, அதே உச்சநீதிமன்றம் ஒரு முறையல்ல, பல முறை, முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று உறுதிபடக் கூறியும் பல ஆண்டுகளாக அதை மதிக்காமல் அலட்சியப்படுத்துகிறது.

வெளிநாடுகளில் இந்தியர்களாக குடிபெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இன்னல் ஏற்பட்ட போதும் இந்திய அரசு கேள்வி கேட்கவில்லை. அவர்களுக்கு உதவ முன் வரவில்லை. அலட்சியப்படுத்துகிறது. இந்திய நாட்டிற்குள் இந்தியர்களாய் வாழும் தமிழர்கள் அடித்து விரட்டப்படும் போதும் அதைத் தடுக்க இந்திய அரசுக்கு மனமில்லை.

இலங்கையைத் தாயகமாகக் கொண்ட தமிழர்களுக்கு அந்நாட்டில் வாழ உரிமையில்லை. இந்தியாவைத் தாயகமாக கொண்ட தமிழர்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை. நாதியற்று நிற்கிறது தமிழினம்.

இந்நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு, சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களுக்கும் அட்டப்பாடியில் விரட்டியடிக்கப்படும் தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்க உடனடியாக ஆவண செய்ய வேண்டும் எனக் கோருகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.
...

Tamils have been arrested in Singapore release Seeman enforcing

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger