Img இந்தியாவில் புழங்கும் 1000 கோடி ரூபாய் கள்ளநோட்டுக்கள்: பாகிஸ்தான் முகமூடி கிழிந்தது India 1000 crore fake money Pakistan mask torn
மும்பை, டிச.26-
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடுபவர்களுக்கு பாகிஸ்தான் உதவி வருவது தடவியல் துறை ஆய்வில் உறுதியாக தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் பல ஆண்டுகளாகவே இவ்விவகாரத்தில் ஈடுபட்டு வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தற்போது நாட்டின் பல பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை ஆய்வு செய்ததில், பாகிஸ்தானின் முகமூடி கிழிந்தது.
கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் அளவுக்கு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இத்தீவிரவாதம், புதிய வடிவில் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சி என கருதப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகம் அமைத்த உயர்மட்ட அளவிலான ரகசிய குழு நடத்திய சோதனையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா, கோவா, கேரளா, ம.பி, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கள்ள நோட்டு மாதிரிகளை ஆய்வு செய்து பாகிஸ்தான், இலங்கை மியான்மர், நேபாளம், பூடான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் உண்மையான ரூபாய் நோட்டுக்களோடு ஒப்பிட்டு பார்த்ததில், பாகிஸ்தான் நாட்டு ரூபாயோடு தற்போது இங்கு புழக்கத்தில் உள்ள நோட்டுக்கள் ஒத்துப்போகின்றன.
இன்னும் சில கள்ளநோட்டுகளில் பாதுகாப்பு நூல், மறைந்துள்ள பிம்பம் ஆகியவை சரியாக ஒத்துப்போவது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் அந்நாடு ரூபாய் நோட்டின் ஜி.எஸ்.எம், தடவவேண்டிய மெழுகின் அளவுகள், பாலி வினைல் ஆல்கஹால் போன்றவை கள்ளநோட்டுளோடு மிகச்சரியாக ஒத்துப்போகின்றன.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 100 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில், தடுப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?