மைனர்களுக்கு மது விற்க தடை
by Marikumar
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து டாஸ்மாக் கடைகளுக்கு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் 21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுவகைகள் விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை அமல்படுத்தும் விதமாக இந்த மாத துவக்கத்தில் இருந்து டாஸ்மாக் கடைகளில் இதுகுறித்த அறிவிப்பு நோட்டீஸ்கள் ஒட்டப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டிருந்தது.
மேலும் தற்போது அரசு உத்தரவை செயல்படுத்தும் விதமாக நோட்டீஸ்கள் அச்சிட்டு ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் 'அரசு உத்தரவின்படி 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மதுபானங்கள் விற்கப்பட மாட்டாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் உள்ள எட்டாயிரத்திற்கும் அதிகமான் டாஸ்மாக் கடைகளிலும் ஒட்டப்பட உள்ளது. மேலும் 21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுவகைகள் விற்க கூடாது என்று டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கும் ஸ்பெஷ்லாக் உத்தரவிடப்பட்டுள்ளது.
Share |
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?