எதிர்பார்த்தபடி நய்யாண்டி நடாத்திய நாடகம் முடிந்தது..
by admin
TamilSpyToday,
திரைப்படத்தை விளம்பரம் செய்ய மலினமான முறையில் நய்யாண்டி குழுவினர் நடாத்திய நாடகம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
இது குறித்து வெளியான செய்தி..
'களவாணி', 'வாகை சூடவா' ஆகிய படங்களை இயக்கிய ஏ.சற்குணம் இயக்கத்தில் தனுஷ்-நஸ்ரியா ஜோடியாக நடித்துள்ள படம் 'நய்யாண்டி'.
இந்த படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து பாடல் காட்சியொன்றை படமாக்கி இருப்பதாக நடிகை நஸ்ரியா குற்றம் சாட்டினர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.
டூப் நடிகையின் ஆபாச காட்சிகளை நீக்காமல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்றும் போர்க்கொடி தூக்கினார். நஸ்ரியா புகாரின் பேரில் போலீசார் நேற்று நய்யாண்டி படத்தை பார்த்தனர்.
நஸ்ரியா தந்தை நசீம் மற்றும் அவரது வக்கீல் ஆகியோரும் போலீசாருடன் படம் பார்த்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வந்த அவர் நுங்கம்பாக்கம் '4 பிரேம்' தியேட்டரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நான் 'யூடியூப்'பில் நய்யாண்டி பட டிரைலரை பார்த்தேன். அதில் ஒரு 'டூப்' காட்சி இருந்தது. அந்த காட்சி என் அனுமதியின்றி எடுக்கப்பட்டு இருந்தது. அது என்னை ஏமாற்றுவது போல இருந்தது. எனவேதான் போலீசில் புகார் கொடுத்தேன். தற்போது அந்த காட்சி டிரைலரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. மேலும் முழு படத்தையும் நான் பார்த்தேன். அதில் 'டூப்' காட்சி இல்லை. அதனால் சமரசம் ஆகிவிட்டேன்.
எனவே போலீசில் கொடுத்த புகாரை நான் வாபஸ் வாங்குகிறேன். என் அனுமதியின்றி 'டூப்' காட்சி இடம் பெற்றதால்தான் புகார் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நான் இதை விளம்பரத்துக்காக செய்யவில்லை. எனக்கு பிடித்த கதை, கதாபாத்திரமாக இருந்தால் ஏ.சற்குணம் இயக்கத்தில் மீண்டும் நடிப்பேன்.
இவ்வாறு நடிகை நஸ்ரியா கூறினார்.
பேட்டியின் போது தயாரிப்பாளர் கதிரேசன், வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து டைரக்டர், தயாரிப்பாளர் மற்றும் நஸ்ரியா இடையே புதிய ஒப்பந்தம் போடப்பட்டு அதில் கையெழுத்திட்டனர்.
பின்னர் கமிஷனர் அலுவலகத்திலும் இந்த ஒப்பந்த நகலை சமர்ப்பித்து சமரசமானார்கள்.
இதையடுத்து 'நய்யாண்டி' படம் திட்டமிட்டபடி நாளை (11-ந் தேதி) தமிழகம் முழுவதும் ரிலீசாகிறது. தனுஷ் ரசிகர்கள் தியேட்டர்களில் கட்-அவுட், கொடி, தோரணைகள் அமைத்து அமர்க்களப்படுத்தி வருகிறார்கள்.
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?