Sunday, 8 September 2013

ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் மீண்டும் இடம் பெறுகின்றது Olympic wrestling again taking place

ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம்
மீண்டும் இடம் பெறுகின்றது Olympic
wrestling again taking place

பியூனஸ் அயர்ஸ், செப். 09-
ஏழு மாதங்களுக்கு முன்னர் ஒலிம்பிக்
போட்டியிலிருந்து நீக்கப்பட்ட மல்யுத்தப்
போட்டிகளை மீண்டும் அனுமதிப்பதாக
ஒலிம்பிக்
கமிட்டி நேற்று அறிவித்தது.
அர்ஜெண்டினாவின் தலைநகரான
பியூனஸ் அயர்சில் கடந்த
வெள்ளியன்று துவங்கிய
கமிட்டி கூட்டத்தில் வரும் 2020
ஆண்டிற்கான ஒலிம்பிக்
போட்டிகளை நடத்தும்
வாய்ப்பினை டோக்கியோ பெற்றது.
நேற்று நடந்த கூட்டத்தில் மல்யுத்தம்,
பேஸ்பால்,சாப்ட் பால் மற்றும்
ஸ்குவாஷ் போன்ற
விளையாட்டுகளுக்கான ரகசிய
வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்,
மல்யுத்ததிற்கு ஆதரவாக 49
வோட்டுகளும், பேஸ்பாலுக்கு 24
வோட்டுகளும், ஸ்குவாஷ்
விளையாட்டிற்கு ஆதரவாக 22
வோட்டுகளும் கிடைத்தன.
இதன் மூலம்,
ஏழு மாதங்களுக்கு முன்னால்
பலருக்கும்
ஆச்சரியத்தை எற்படுத்தும்விதத்தில்
முக்கிய
போட்டிகளிலிருந்து விலக்கப்பட்ட
மல்யுத்தம் நேற்று மீண்டும் ஒலிம்பிக்
போட்டியில் இடம்பெற்றது. இந்த
முடிவானது, ஒலிம்பிக் போட்டியில்
தங்களை மீண்டும் நிலைநிறுத்திக்
கொள்ள மல்யுத்த அமைப்பான
ஃபிலா மேற்கொண்ட தீவிரப்
பிரச்சாரத்தின் வெற்றியைக்
குறிக்கின்றது.
தங்களுடைய அமைப்பினை மேம்படுத்த
எடுத்துக்கொண்ட முயற்சிகளின்
விளைவே இந்த அறிவிப்பிற்குக்
காரணமாகும் என்று ஃபிலா அமைப்பின்
தலைவரான நேனட் லலோவிக்
தெரிவித்தார். இதன் முயற்சிகள்
தொடரும் என்றும், தாங்கள் ஒலிம்பிக்
இயக்கத்திற்கு சிறந்த முறையில்
துணை நிற்போம் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் விலக்கப்பட்ட இந்த
ஏழு மாதங்களில் தாங்கள் சரியான
முறையில் பாடம் கற்றுக்கொண்டதாக
நேனட் தன்னுடைய இறுதி விளக்கத்தில்
கூறினார்.
மூன்று விளையாட்டு அமைப்புகளும்
தங்களின்
இறுதிவிளக்கங்களை அளித்தபின்னர் இந்த
வாக்கெடுப்பு நடைபெற்றது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger