முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் அண்மையில் பெய்த மழையின் போது விழுப்புரம் மாவட்டம், ரோசனை பகுதியைச் சேர்ந்த தங்கவேல் 10.8.2013 அன்றும்; தஞ்சாவூர் மாவட்டம், சாக்கோட்டையைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி பவுனம்மாள் 11.8.2013 அன்றும்; விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகரத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் அருள்பாண்டி 29.8.2013 அன்றும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம், பெருமாத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த குருசாமி 16.8.2013 அன்றும்; விருதுநகர் மாவட்டம், வாடியூரைச் சேர்ந்த பெரியசாமி மகன் சின்ன சடாச்சரம்; மதுரை மாவட்டம், சேடப்பட்டியைச் சேர்ந்த சுந்தரபாண்டி மகன் சுந்தரம்; திருவள்ளூர் மாவட்டம், மாதர்பாக்கம் குறுவட்டம், நேமலூர் மதுரா சின்ன பொம்மாச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மனைவி கெங்கம்மாள் ஆகியோர் 29.8.2013 அன்றும் விருதுநகர் மாவட்டம், சின்ன ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி; திருநெல்வேலி மாவட்டம், குறவர்குளத்தைச் சேர்ந்த சிவன்பாண்டி மகன் துரைப்பாண்டி ஆகியோர் 31.8.2013 அன்றும் இடி, மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
சிவகாசி நகரத்தைச் சேர்ந்த பரமசிவம் மகன் தங்கப்பாண்டி 29.8.2013 அன்று வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்த மடைந்தேன்.
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த தங்கப்பாண்டிக்கு 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்– அமைச்சர் ஜெயலலிதா கூறி உள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?