குடும்ப நண்பரை அச்சுறுத்த நினைத்த
இந்திய இளம்பெண்
சுட்டுக்கொலை family friend trying to
threatened Indian young shot dead
நியூயார்க், செப்.9-
அமெரிக்காவில்
கொலராடோ மாகாணம் லாங்மோன்ட்
பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் லால்.
இந்தியரான இவருடைய மகள்
பிரேமிளா லால் (வயது 18). இவர்
ஓட்டப்பந்தய வீராங்கனை. இவர்களுடைய
குடும்ப நண்பர் நெரிக் காலே (21). இவர்,
பிரேமிளா குடும்பம் காலி செய்த
வீட்டில் தங்கி இருந்தார்.
அந்த வீட்டுக்கு நெரிக்
காலேவுக்கு தெரியாமல் பிரேமிளா,
தன் ஒன்றுவிட்ட சகோதரியுடன்
சென்றார். நெரிக்குக்கு இன்ப
அதிர்ச்சி கொடுக்க நினைத்த அவர்,
அங்குள்ள
ஒரு சிறு அறையை திடீரென
திறந்து கொண்டு கூச்சலிட்டபடி நெரிக்
முன்பு தோன்ற முயன்றார்.
திடீர் சத்தத்தால் பீதி அடைந்த நெரிக்,
யாரோ மர்ம
ஆசாமி புகுந்து விட்டதாக கருதி,
தனது துப்பாக்கியை எடுத்து சுட்டு விட்டார்.
இதில் குண்டு பாய்ந்த பிரேமிளா,
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்
சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம்
தொடர்பாக நெரிக்
மீது இதுவரை கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
அஜாக்கிரதையாக
ஆபத்தை விளைவித்ததாக
மட்டுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?