Monday 9 September 2013

விநாயகர் சிலையுடன் நடுரோட்டில் ஆர்ப்பாட்டம் allow denial road vinayagar statue demonstration in perambur

பெரம்பூர் சுப்பிரமணிய தோட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக 9 அடி விநாயகர் சிலை வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அங்கு விநாயகர் சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் நேற்று இரவு போலீசார் அங்கு வந்து விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். அதோடு அங்கிருந்த பந்தல் மற்றும் மேடையை போலீசார் அப்புறப்படுத்தினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் இந்து சத்தியசேனா அமைப்பின் மாநில தலைவர் வசந்தகுமார் தலைமையில் 50–க்கும் மேற்பட்டோர் இன்று காலை பெரம்பூர்– மாதவரம் நெடுஞ்சாலையில் குவிந்தனர். அவர்கள் நடுரோட்டில் விநாயகர் சிலையை வைத்துப் பூஜை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் செம்பியம் உதவி கமிஷனர் விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் ரேவதி, ராமநாதன், ராஜேஷ் கண்ணா தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். பெரம்பூர்– மாதவரம் நெடுஞ்சாலையில் தணிகாசலம் தெரு சந்திப்பில் விநாயகர் சிலையை வைக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்து சேனா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger