Saturday, 10 August 2013

தீவிரவாதிகள் மிரட்டலால் மூடப்பட்ட அமெரிக்க தூதரங்கள் நாளை மீண்டும் திறப்பு US embassies to reopen after Al Qaeda terror alert



கடந்த ஞாயிறன்று அரேபிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள 19 அமெரிக்க தூதரங்களை தாக்கப்போவதாக அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டியதால் அந்த தூதரகங்கள் மூடப்பட்டன. மேலும், பாகிஸ்தான் லாகூர் நகரில் உள்ள, அமெரிக்க தூதரகத்திற்கும் தனியாக ஒரு மிரட்டல் வந்தது. இதையடுத்து கடந்த வியாழன் அன்று அதுவும் மூடப்பட்டு அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர்.

ஏமனில் உள்ள அல்கொய்தா தீவிரவாதிகள் மீது அமெரிக்கா, ஆளில்லா விமானத்தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஏமன்-சனா அமெரிக்க தூதரகத்திற்கு வந்த தொடர் மிரட்டலால், அங்கிருந்த அமெரிக்க அதிகாரிகளும் கடந்த செவ்வாயன்று வெளியேறினர்.

இந்நிலையில், ஏமன் தலைநகர் சனா மற்றும் லாகூரில் உள்ள தூதரகம் தவிர மற்ற 18 தூதரகங்கள் நாளை மீண்டும் திறக்கப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. சனா மற்றும் லாகூர் தூதரகத்தில் பணியாற்றும் தூதரக அதிகாரிகள் மற்றும் அங்கு சென்றுவரும் அமெரிக்கர்களின் முழு பாதுகாப்பு குறித்து மதிப்பிட்ட பிறகே அங்குள்ள தூதரகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger