தென் மேற்கு பருவ மழை கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பெய்து வருவதால் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வருகிறது.
இது தவிர காவிரி டெல்டா மாவட்டங்களிலும் அவ்வப் போது மழை பெய்து வருகிறது. வடமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் வழிமண்டல மேல் அடுகில் உருவான வெப்ப சலனம் காரணமாக மேகம் திரண்டு திடீர் திடீரென மழை பெய்து வருகிறது.
சென்னை திருவள்ளூர் காஞ்சீபுரம் மாவட்டங்களில் விடிய விடிய லேசான மழை பெய்தது. இன்று காலையிலும் தூறல் விழுந்தது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி கூறுகையில் வெப்ப சலனம் காரணமாக வழி மண்டல மேல் அடுகில் உருவான சுழற்சி காரணமாக பெய்து வரும் மழை இன்றும் நீடிக்கும் என்று கூறினர்.
சென்னை மீனம்பாக்கத்தில் 6.9 மி.மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 1 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?