நடிகர் விஜய், அமலாபால், சத்யராஜ், சந்தானம் நடிப்பில் இயக்குனர் விஜய்
இயக்கியுள்ள படம் ‘தலைவா’. இப்படத்தை மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் சார்பில் சந்திர
பிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். இப்படம் கடந்த 9-ந் தேதி உலகமெங்கும்
வெளியாக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்டால் திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து, இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் படம் வெளியானது. அங்கு படம் வெளியானதால், திருட்டு விசிடி கும்பல், இப்படத்தை திருட்டு விசிடி தயாரித்து புழக்கத்தில் விட ஆரம்பித்தது. இதனால் தயாரிப்பு வட்டாரம் பெரும் நெருக்கடியை சந்தித்தது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் இந்த படம் வெளியாகாவிட்டால் கடனாளி ஆகிவிடுவேன். ஆகையால், படத்தை வெளியிடவேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதற்காக படக்குழுவினருடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்தார். ஆனால், உண்ணாவிரதத்துக்கு காவல்துறை தடை விதித்தது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ‘தலைவா’ பட விவகாரத்தால் மனஅழுத்தம் ஏற்பட்டு, அதனால் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?