நிட்டாகட் சட்டத்தால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் இந்தியர்கள் சவுதியில் இருந்து தாயகம் திரும்பினர்: இந்திய தூதரகம் தகவல் 20 thousand Indians flee Saudi as nitaquat effect
சவுதி அரேபியா அரசு கடந்த ஏப்ரல் 1-ந் தேதியன்று முதல் நிட்டாகட் (சமநிலை) என்ற புதிய வேலை வாய்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்தியது.இந்த சட்டத்தின்படி, அந்நாட்டில் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பணியமர்த்தப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையில் 10 வெளிநாட்டினருக்கு 1 உள்ளூர்வாசி என்ற விகிதாச்சாரத்தின்படி வேலை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால், அங்கு பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழந்து தாய்நாட்டிற்கு திரும்பி வரவேண்டிய சூழ்நிலை உருவானது.
இந்த புதிய சட்டத்தின் விளைவாக சவுதி அரேபியாவில் இருந்து சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக அந்நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரி தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் உரிய அனுமதி ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ள வெளிநாட்டினர் வெளியேற முன்னதாக ஜூலை 3ம் தேதி வரை கெடு விதித்திருந்த அரசு, அந்த கெடுவினை தற்போது நவம்பர் 3 வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 3க்குள் சவுதியை விட்டு வெளியேறும் வெளிநாட்டினருக்கு அபராதமோ தண்டனையோ விதிக்கப்பட மாட்டாது என அரசு அறிவித்துள்ளதால் எதிர்வரும் 3 மாதங்களில் மேலும் பல இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறலாம் என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?