Tuesday 20 August 2013

வீராட் கோலி சிறந்த கேப்டன் Dhoni opinion Virat kohli is a good captain

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக வீராட் கோலி ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் கேப்டனாக பணியாற்றினார். டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட அந்த போட்டியில் இந்தியா 5 ஆட்டத்திலும் வென்று முத்திரை பதித்தது.
இந்த நிலையில் வீராட் கோலியை கேப்டன் டோனி பாராட்டியுள்ளார். சிறந்த கேப்டனாக உருவாகுவார் என்று கூறியுள்ளார். இது குறித்து டோனி கூறியதாவது:–

கடந்த ஒரு ஆண்டில் வீராட் கோலியிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆக்ரோஷத்துடன் செயல்படுவது அவரை பற்றிய சிறந்த விஷயமாக கருதப்படுகிறது.
இது கேப்டன் பதவியிலும் அவருக்கு உதவியாக இருக்கிறது. அவரது அணுகுமுறை பீல்டிங்கில் நல்ல மாற்றத்தை தந்தது. ஜிம்பாப்வே தொடரில் அவரது செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. கோலி சிறந்த கேப்டனாக உருவாகுவார்.
அனைத்து இளைஞர்களை கொண்ட அணியை நான் உருவாக்கியதாக கூறப்படுவதை ஏற்க முடியாது.
அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு உடல் தகுதி மற்றும் திறமையே காரணம். அதிக வயது என்பது பிரச்சினை இல்லை. 40 அல்லது 42 வயது வீரராக இருந்தாலும் உடல் தகுதியே முக்கியம். உடல் தகுதியுடன் இருந்தால் தான் சிறப்பாக பீல்டிங் செய்ய முடியும்.
அனைத்து காலக்கட்டத்திலும் விளையாடிய சிறந்த வீரர்களை வைத்து கனவு அணியை தேர்வு செய்வது கடினம். அதனால் கனவு அணியை தேர்வு செய்ய மாட்டேன். இந்திய அணிக்காக விளையாடிய அத்தனை வீரர்களையும் மதிக்க வேண்டும்.
இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger