Tuesday, 20 August 2013

தலைவா படம் வெளிவர நடவடிக்கை எடுத்த ஜெயலலிதாவுக்கு நன்றி - நடிகர் விஜய்

தலைவா படம் வெளிவர நடவடிக்கை எடுத்த ஜெயலலிதாவுக்கு நன்றி: நடிகர் விஜய் அறிக்கை thalaiva movie release action jayalalitha wish actor vijay statement

 

நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஆகஸ்ட் 9–ந்தேதி வெளிவர வேண்டிய ‘தலைவா’ திரைப்படம், சில அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை. கடந்த பத்து தினமாக நான், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

மீடியாக்களில் வந்த பல கட்டுக்கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த பிரச்சினையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமூகமாக வெளிவர நடவடிக்கை எடுத்துள்ளார். பல வேலைகளுக்கு நடுவிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னோடு பொறுமை காத்த அத்தனை ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு ‘தலைவா’ திரைப்படத்தை குடும்பத்தோடு தியேட்டரில் பார்த்து ரசிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger