இந்திய எல்லைக்குள் கடந்த மே மாதம் சீனா மீண்டும் ஊடுருவியது. வாபஸ் பெற்றுச்சென்ற இடத்துக்கு மீண்டும் தனது
படைகளுடன் அத்துமீறி நுழைந்து உள்ளது. சீனப்படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியா-சீனா எல்லையில்
லடாக் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து முகாம்களை அமைத்தன.
சுமார் 19 கி.மீட்டர் தூரத்துக்கு சீன படைகள் ஊடுருவி இருந்தன. இதன் காரணமாக எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தின.
அவ்வேளையில், சீன பிரதமர் லீ கெகியாங் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண சீன-இந்திய ராணுவ அதிகாரிகள் கூட்டாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
இதில் சமரசம் ஏற்பட்டு, சீனா தனது படைகளை வாபஸ் பெற்றுக்கொள்ள சம்மதித்தது. அதன்படி, அத்துமீறி நுழைந்த பகுதியில் இருந்து சீன படைகள் வாபஸ் பெறப்பட்டன.
இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் உள்ள சக்லகாம் பகுதியில் மீண்டும் கடந்த 13ம் தேதி 20 கி.மீட்டர் தூரம் வரை ஊடுருவிய சீன ராணுவ வீரர்கள், இங்கு 2 நாட்களுக்கும் மேலாக தங்கியுள்ளனர்.
அவர்களின் ஊடுருவலை கண்டுபிடித்த இந்திய படையினர் வெளியேறும்படி பேனர் களை காட்டிய பின்னர் அவர்கள் திரும்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதைப்போன்று எல்லை கடந்து வீரர்கள் முன்னேறி செல்வதும், பின்னர், பின்வாங்கி செல்வதும் எல்லைக் கோட்டுப் பகுதியில் சகஜமாக நடைமுறை தான் என ராணுவ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 மாதங்களில் இந்திய எல்லைக்குள் சீனப் படையினர் சுமார் 150 முறை ஊடுருவியுள்ளனர். இதே போல், இந்திய வீரர்களும் சில வேளைகளில் சீன எல்லைக்குள் தெரியாமல் பிரவேசித்ததுண்டு எனவும் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?