Monday 5 August 2013

மக்களவை கூட்டத்திற்கு பாதி நாள்களுக்கு மேல் வராத ராகுல் , சோனியா

கடந்த 4 ஆண்டுகளில் பாராளுமன்ற
மக்களவை கூட்டம் மொத்தம் 314 நாட்கள்
நடைபெற்றன. அவற்றில், காங்கிரஸ் தலைவர்
சோனியா காந்தியும் துணைத்தலைவர் ராகுல்
காந்தியும் ஏறத்தாழ பாதி நாட்கள் நடைபெற்ற
கூட்டங்களில்
மட்டுமே பங்கேற்று இருக்கிறார்கள்.
சோனியா காந்தி 48 சதவீதமும், ராகுல் 43
சதவீத கூட்டங்களிலும் கலந்து கொண்டனர்.
கட்சித்தலைவர்களில் முலாயம்சிங் யாதவ்
(சமாஜ்வாடி) அதிக நாட்கள், அதாவது 86
சதவீத கூட்டங்களுக்கு வந்து இருக்கிறார்.
அவருக்கு அடுத்து பா.ஜனதாவின் மூத்த
தலைவர் அத்வானி 82 சதவீதமும், ராஜ்நாத்சிங்
80 சதவீத நாட்களும் சபை நிகழ்ச்சிகளில்
பங்கேற்றனர்.
ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ், 83
சதவீத நாட்களும், ராஷ்டிரீய ஜனதா தள
தலைவர் லாலுபிரசாத் யாதவ் 70 சதவீத
நாட்களும் சபைக்கு வந்துள்ளனர்.
மக்களவை இணைய தளம் வெளியிட்டுள்ள
புள்ளிவிவரத்தின்படி, மொத்தம் 120
எம்.பி.க்கள் 90 சதவீதத்துக்கும் அதிகமான
கூட்டங்களில்
கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger