Monday, 5 August 2013

இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 3 வது டெஸ்ட் டிராவில் முடிந்தது Ashes 3rd test Match drawn

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் போட்டி தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 527 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 4-வது நாளில் முதல் இன்னிங்சில் 368 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

பின்னர் 159 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது. வேகமான ரன் சேர்ப்பில் ஈடுபட்ட ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை விரைவில் இழந்தது. போதிய வெளிச்சமின்மையால் 36-வது ஓவரில் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது அந்த அணி 7 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து மழையும் பெய்ததால் 4-வது நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக 32 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டன. வார்னர் 41 ரன்களும், வாட்சன் 18 ரன்களும், கேப்டன் மைக்கேல் கிளார்க் 30 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர். அத்துடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை (172/7) டிக்ளேர் செய்தது.

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 332 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் குக் ரன் எதுவும் எடுக்காமலும், டிராட் 11 ரன்னிலும், கெவின் பீட்டர்சன் 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்து இருந்தது. மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. அப்போது அணியின் ஸ்கோர் 20.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 37 ரன்னாக இருந்தது. ஜோரூட் 13 ரன்னுடனும், இயான்பெல் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மழை தொடர்ந்து கொட்டியதால் நடுவர்கள் ஆட்டத்தை அத்துடன் கைவிடுவதாக அறிவித்தனர். இதனால் இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் ஆஷஸ் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற ஆஸ்திரேலியாவின் கனவு கலைந்தது. எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வென்றாலே இங்கிலாந்து தொடரை கைப்பற்றி விடும்.

ஆஷஸ் போட்டி தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி ஷெஸ்டர் லி ஸ்டிரிட்டில் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger