இங்கிலாந்து இளவரசர் சார்லசை திருமணம்
செய்து கொண்ட டயானா, 31-8-1997ம் ஆண்ட
காதலர் டோடி ஃபயீத்துடன் பாரீஸ் நகர கார்
விபத்தில் பலியானார்.
சார்லசுடன் வாழ்ந்த
போதே இன்னொரு நபரை காதலிப்பதாக
டயானா அளித்த பேட்டி இங்கிலாந்து ராஜ
குடும்பத்தை பெரும் அதிர்ச்சியில்
ஆழ்த்தியது. இதனையடுத்து,
டயானாவை விவாகரத்து செய்து விடும்படி சார்லசை ராணி எலிசபத்
வற்புறுத்தினார்.
வில்லியம், ஹாரி என்ற
இரு மகன்களை சார்லசுடன் பெற்ற
டயானா விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்தார்.
அப்போது பல்வேறு சமூக
தொண்டுகளை செய்து வந்த
டயானா பாகிஸ்தானை சேர்ந்த டாக்டரான
ஹஸ்னத் கான் என்பவரை உயிருக்குயிராக
காதலித்தார்.
டாக்டர் ஹஸ்னத் கான் பாகிஸ்தான் முன்னாள்
கேப்டனும் தற்போதைய தெஹ்ரிக் இ இஸ்லாம்
கட்சியின் தலைவருமான இம்ரான்கானின்
உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்
கொள்வதற்காக இம்ரான் கானின்
மனைவி ஜெமிமா கானுடன்
டயானா நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.
டயானா விபத்தில் இறந்து 16 ஆண்டுகள்
கழித்து அவரது மகன் இளவரசர்
வில்லியமிற்கு கேட் மிடில்டன் மூலம் ஆண்
குழந்தை பிறந்துள்ளது. அந்த
குழந்தைக்கு ஜார்ஜ் என பெயரிடப்பட்டுள்ளது.
இதனையொட்டி, உலகப்புகழ் பெற்ற
வேனிட்டி ஃபேர் பத்திரிகையில் தனக்கும்
டயானாவுக்கும் இருந்த நட்பு பற்றி இம்ரான்
கானின் மனைவி ஜெமிமா கான் ஓர்
கட்டுரையை எழுதியுள்ளார்.
குட்டி இளவரசன் ஜார்ஜ்
எப்போதுமே அறிந்திராத பாட்டி (த
கிராண்ட்மதர் பிரின்ஸ் ஜார்ஜ் நெவர் நியூ) என
அந்த கட்டுரைக்கு அவர் தலைப்பிட்டுள்ளார்.
காதலர் ஹஸ்னத் கானை சந்திக்க
பாகிஸ்தானுக்கு டயானா 2
முறை வந்ததையும், பாகிஸ்தானில் உள்ள
அவரது ஆஸ்பத்திரிக்கு நிதி திரட்ட அவர்
உதவியதையும் ஜெமிமா கான் அந்த
கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மீதிருந்த வெறித்தனமான காதலின்
வெளிப்பாடாக டாக்டர் ஹஸ்னத்
கானையே திருமணம்
செய்து கொண்டு பாகிஸ்தானில் குடியேற
டயானா திட்டமிட்டிருந்ததையும்
ஜெமிமா சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த காதலும் கசந்து போனதால் பிரான்ஸ்
நாட்டை சேர்ந்த டோடி ஃபயீத் என்பவருடன்
டயானா ரகசியமாக ஊர் சுற்ற ஆரம்பித்தார்.
இருவரும் இணைந்து காட்சியளிக்கும்
புகைப்படங்களை படம் பிடிக்க கேமராக்களும்,
பிரசுரிக்க பத்திரிகைகளும் போட்டி போட்டுக்
கொண்டு இந்த ஜோடியை விரட்ட தொடங்கின.
பத்திரிகை பரபரப்பு (பாப்பராசி) எனப்படும்
இந்த விரட்டலில் இருந்து தப்பிக்க காதலர்
டோடி ஃபயீத்துடன் பாரிசில் உள்ள
சுரங்கப்பாதையில் தலைதெறிக்கும் வேகத்தில்
காரில் சென்ற டயானா பயங்கர விபத்தில்
சிக்கி பரிதாபமாக பலியானார்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?