Saturday, 3 August 2013

உள்ளாடைக்குள் ரூ.2½ கோடி

சிங்கப்பூரில்
இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச
விமான நிலையத்துக்கு சிங்கப்பூர்
ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. அந்த
விமானத்தில் வந்த பயணிகளிடம் வருவாய்
புலனாய்வு இயக்குரக அதிகாரிகள் மற்றும்
கண்காணிப்பு இயக்குனரக அதிகாரிகள்
அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு பெண்
பயணி மீது அவர்களுக்கு சந்தேகம் வலுத்தது.
அவரிடம் சோதனை நடத்தியதில், அவர்
உள்ளாடைக்குள் வைரம் பதித்த தங்க
நகைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
ரூ.2½ கோடி மதிப்புள்ள அந்த நகைகள்
பறிமுதல் செய்யப்பட்டன.
அவரை கைது செய்து தீவிர
விசாரணை நடத்தியதில், பரபரப்பு தகவல்கள்
வெளியாகின. அவரது பெயர் விஹாரி போடார்
என்றும், சிங்கப்பூரில் உள்ள
நகை மாளிகை நிறுவனத்தின் நிர்வாக
இயக்குனர் என்றும் தெரியவந்தது. அவருடைய
கணவர் அபிஷேக் போடார் பிரபல
ஜவுளி நிறுவனத்தின் அதிபர் ஆவார்.
இதுபோன்று 10 தடவை வைரம் மற்றும் தங்க
நகைகளை கடத்தி வந்த தகவலையும்
விசாரணையின்போது அவர் வெளியிட்டார்.
விஹாரி போடாருக்கு மும்பை சாந்தாகுரூசில்
நகைக்கடைகள் உள்ளன. அந்த கடைகளுக்காக
சிங்கப்பூரில்
இருந்து நகைகளை கடத்தி வந்திருக்கிறார்.
விசாரணைக்குப்பின் சாந்தாகுரூசில் உள்ள
அவருடைய நகை கடைகளிலும்
அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அங்கு கணக்கில் காட்டப்படாத ரூ.4
கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
செய்யப்பட்டன.
பின்னர் விஹாரி போடார்
மும்பை மெட்ரோபாலிட்டன்
மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger