போதை ஊசி போட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலின் பிடியில் மேலும் 2 சிறுமிகள்: மீட்கப்பட்ட சிறுமி தகவல் Injection drug gang gain 2 girls recovery child information
சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அபர்ணா. இவரை அதே பகுதியில் ஆசிரமம் வைத்து குறி சொல்லி வந்த அறவழி சித்தர் (48) என்பவர் போதை மருந்து கொடுத்தும், போதை ஊசி போட்டு பல முறை கற்பழித்து உள்ளார். இதற்கு அபர்ணாவின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.
அபர்ணாவுடன் தனது காம பசியை தீர்த்து அலுத்து போன அறவழி சித்தர் பின்னர் அந்த அப்பாவி சிறுமியை விபசார கும்பலிடம் விற்பனை செய்து விட்டார். அந்த கும்பலிடம் இருந்து தப்பிய அபர்ணா திருப்பதி சென்று அங்கு மாங்காய் வியாபாரம் செய்து வந்தார். சந்தேகம் அடைந்த ஆந்திர போலீசார் சிறுமியை பிடித்து விசாரித்த போது, அவர் தனது கடந்த கால சோகங்களை கூறினார்.
சிறுமியை தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். சென்னை போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் உத்தரவின் பேரில் வியாசர்பாடி போலீசார் அறவழி சித்தரையும், சிறுமியின் தாயார் சிறுமலரையும் கைது செய்தனர். அறவழி சித்தரின் 2 அறைகள் கொண்ட ஆசிரமத்தில் போலீசார் சோதனையிட்ட போது ஆபாச சி.டி.க்கள் சிக்கியது. விபசாரகும்பலை சேர்ந்த குமார், செல்வம் மற்றும் மேலும் 2 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அபர்ணாவின் கற்பை சூறையாடிய காமுகர்களான திருவான்மியூரைச் சேர்ந்த சதீஷ், வடசென்னையை சேர்ந்த குமார், அப்பு, கணேஷ், பப்புலு ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் சிறுமி அபர்ணாவிடம் உல்லாசம் அனுபவிக்க விபசார புரோக்கர் செல்வத்துக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து உள்ளனர். மீட்கப்பட்ட சிறுமி அபர்ணா தற்போது குழந்தைகள் நல கமிட்டி பராமரிப்பில் காப்பகத்தில் உள்ளார். அவர் உடல் முழுவதும் போதை ஊசி போடப்பட்ட தழும்புகள் உள்ளது. அவர் கூறும் போது,
விபசார கும்பலிடம் என்னை போல் மேலும் 2 சிறுமிகள் சிக்கி உள்ளனர். ஒருத்தி தி.நகரை சேர்ந்தவள் என்றும், இன்னொருத்தி மூலக்கடையை சேர்ந்தவள் என்றும் கூறினார். 7-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர் தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும் தெரிவித்தாள். அவரது விருப்பத்தை நிறைவேற்ற குழந்தைகள் நல கமிட்டி திட்டமிட்டுள்ளது. கைதான அறவழி சித்தர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். சித்தரிடம் ஏமாந்த பெண்கள் பற்றியும் விசாரணை நடக்கிறது.
மேலும் தலைமறைவான விபசார பெண் புரோக்கர் லதா, ஜெயா ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?