டுவிட்டர் இணையதளத்தில் 15 மொழிகளில் பதில் அளிக்கும் நரேந்திர மோடி twitter website 15 languages answer modi
குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி இணைய தளம் டுவிட்டரில் தனது கருத்தக்களை வெளியிட்டு வருகிறார். அதில் அவர் பல மொழிகளையும் பயன்படுத்துகிறார். சமீபத்தில் உடல்நலம் குன்றிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு நரேந்திர மோடி டுவிட்டர் இணைய தளத்தில் அவர் குணம் அடைய வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்த தகவலை அவர் ஆங்கிலம் குஜராத்தி மொழிகளில் மட்டுமல்லாது உருது, இந்தி, வங்காளி உள்பட 13 மொழிகளில் வெளியிட்டு இருந்தார்.
இதன் மூலம் அவர் 15 மொழிகளை டுவிட்டரில் பயன்படுத்தி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இதுதவிர பொதுக்கூட்டங்களில் அந்தந்த மாநில மொழிகளில் பேசும் திறனும் பெற்று இருக்கிறார். கடந்த 11–ந்தேதி ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் நரேந்திர மோடி தெலுங்கில் பேசினார்.
இதே போல் ஒடிசா மாநிலம் பூரியில் நடந்த கூட்டத்தில் ஒரியா மொழியில் பேசினார். அவருக்கு ஏற்கனவே குஜராத்தி, இந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேச முடியும்.
இது தவிர அவரது டுவிட்டரில் 50 மொழிகளில் பதில் அளிக்குமாறு தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் பணிகள் நடந்து வருகிறது. அதன் மூலம் அந்தந்த மாநில மொழிகளில் பதில் அளிக்க நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது. இதையொட்டி அனைத்து மாநில மக்களுடன் தொடர்பு கொள்ள வசதியாக இந்த ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?