Sunday 14 July 2013

பெரியாறு அணையில் நீர்மட்டம் குறைகிறது periyar dam water level decrease

பெரியாறு அணையில் நீர்மட்டம் குறைகிறது periyar dam water level decrease

 

கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நீர்மட்டமும் உயர்ந்தது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்கு முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை.

அவ்வப்போது சாரல்மழை மட்டுமே பெய்து வருகிறது. இன்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.50 அடியாக இருந்தது.

அணைக்கு நீர்வரத்து 1132 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 1372 கனஅடியாகவும் இருந்தது. கொள்ளளவு 3519 மி.கனஅடியாகும். வைகை அணையின் நீர்மட்டம் 49.80 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 871 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 60 கனஅடியாகவும் இருந்தது. கொள்ளளவு 1967 மி.கனஅடியாகும்.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 22 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 8 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 8 கனஅடியாகவும் இருந்தது. கொள்ளளவு 22.52 மி.கனஅடியாகும்.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 27,88 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர் வெளியேற்றம் 3 கனஅடி. கொள்ளளவு 5.41 மி.கனஅடியாகும்.

தேக்கடியில் மட்டும் 2.2 மி.மீ மழை பதிவானது. மற்ற பகுதிகளில் வெயில் அடித்து வருகிறது. தொடர்ந்து மழை குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் குறையுமோ என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger