‘திவ்யா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது’: இளவரசனின் தந்தை சொல்கிறார் elavarasan unfulfilled desire father speech
இளவரசன் கடைசியாக எழுதிய கடிதத்தில் நான் இறந்த பிறகு திவ்யா என்னை பார்க்க வருவார் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் நேற்று உடல் அடக்கத்தில் அவர் கலந்து கொள்ளாததால் இளவரசனின் கடைசி ஆசை நிறைவேறவில்லை.
நத்தம் காலனியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செல்லன்கொட்டாயை சேர்ந்த திவ்யாவை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார் இளவரசன். இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7–ந்தேதி திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது நடந்த பிரச்சினை காரணமாக திவ்யா தனது தந்தையின் இறுதிசடங்கில் பங்கேற்கவில்லை. பின்னர் பிரச்சினைகள் முடிந்து மீண்டும் திவ்யா தனது கணவர் இளவரசனுடன் தர்மபுரியில் வசித்து வந்த நிலையில் திடீரென அவருடன் செல்ல மறுத்து விட்டார்.
இதையடுத்து இளவரசன் இறந்து விட்டார். அவர் கடைசியாக தனது மனைவி திவ்யா, மற்றும் பெற்றோருக்கு தனிதனியாக உருக்கமான கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் என் கடைசி ஆசை, நான் இறந்த பின் என்னை பார்க்க திவ்யா வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.
இளவரசன் இறுதிசடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என திவ்யா சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டது. அதே போல் நேற்று நத்தம் காலனியில் இளவரசன் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட போதும், இறுதி சடங்குகள் நடந்த போதும், திவ்யா கடைசி வரை கலந்து கொள்ளவில்லை. இதனால் இளவரசனின் கடைசி ஆசை நிறைவேறவில்லை.
முன்பு தந்தை மரணத்தில் கலந்து கொள்ள முடியாத திவ்யா, தற்போது இளவரசன் மரணத்திலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?