Friday, 19 July 2013

ஆம்னி பஸ்சில் பெண் டாக்டரிடம் செக்ஸ் தொல்லை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலைச் சேர்ந்த பெண் டாக்டர் சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தஞ்சையில் பணியாற்றி வருகிறார். திருமணமாகாத இவர் தஞ்சையிலேயே வீடு எடுத்து பெற்றோருடன் தங்கி உள்ளார்.
டாக்டர் சுஜா ஆவடியில் கேந்திர வித்யாலயாவில் நடந்த இன்டர்வியூவில் கலந்து கொள்வதற்காக கடந்த 17–ந் தேதி இரவு 9.30 மணிக்கு எஸ்.ஆர்.எம். ஆம்னி பஸ்சில் தஞ்சையில் இருந்து சென்னை புறப்பட்டார்.

அவருக்கு பஸ்சின் கடைசி இருக்கைக்கு முன் உள்ள இருக்கை ஒதுக்கப்பட்டது. 2 பேர் அமரக்கூடிய இடத்தில் பெண்டாக்டர் சுஜா மட்டும் அமர்ந்து இருந்தார். பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. அவருக்கு பின்னால் உள்ள இருக்கையில் 2 வாலிபர்கள் அமர்ந்து பயணம் செய்தனர். அந்த சீட்டில் மாற்று டிரைவர் வெள்ளை சீருடையில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
பஸ் புறப்பட்டதும் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி விட்டனர். நள்ளிரவில் திண்டிவனம் ‘டோல்கேட்’ அருகில் வந்த போது சுஜாவின் பின்னால் இருந்த 2 வாலிபர்களும் அவரை தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
தூக்கத்தில் தெரியாமல் கைபட்டு விட்டதாக கருதிய பெண் டாக்டர் அவர்களை சத்தம் போட்டு எச்சரித்தார். அதன் பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் சில்மிஷத்தை தொடங்கினார்கள். இதனால் எரிச்சல் அடைந்த பெண் டாக்டர் கூச்சல் போட்டு பஸ்சை நிறுத்தச் சொன்னார். பின் சீட்டில் தூங்கிய மாற்று டிரைவரிடம் வாலிபர்கள் சில்மிஷம் பற்றி புகார் கூறினார். விளக்கை போட்டு பஸ்சை ஓட்டுமாறு கூறினார்.
அதற்கு அவர் பஸ்சில் இதெல்லாம் சகஜம், நீ கண்டு கொள்ளாமல் போ, விளக்கு போட்டால் எல்லோருக்கும் தூக்கம் கெடும். ரூ.500 கட்டணம் கொடுத்து செல்லும் பஸ்சில் இதெல்லாம் சகஜம் என்றார்.
பஸ் டிரைவரின் இந்தப் பேச்சு வாலிபர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. இதனால் வாலிபர்களின் செக்ஸ் தொந்தரவு முன்பை விட அதிகரித்தது.
தொடர்ந்து தூங்க முடியாமலும், உட்கார்ந்து பயணம் செய்ய முடியாமலும் பெண் டாக்டர் அவதிப்பட்டுக் கொண்டே வந்தார். இடைஇடையே வாலிபர்களுடன் வாக்கு வாதம் செய்து கொண்டே அவர்களை தனி ஆளாக தடுத்து வந்தார்.
பஸ் டிரைவர் கண்டு கொள்ளாமல் தூங்கிக் கொண்டு வந்தார். வாலிபர்களின் சில்மிஷம் எல்லை மீறியதால் பெண் டாக்டர் மீண்டும் பஸ் டிரைவரை எழுப்பி, வாலிபர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. அவர்களை கீழே இறக்கி விடுங்கள் அல்லது போலீஸ் நிலையத்துக்கு பஸ்சை ஓட்டுங்கள் என்றார். அதற்கு டிரைவர் அவர்களுடன் உன்னையும் சேர்த்து இறக்கி விடுவேன் என்று எச்சரித்தார்.
உடனே தனது பயண சீட்டில் இருந்த எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் டெலிபோன் எண்ணில் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் யாருமே போனை எடுக்காததால் 100–க்கு போன் செய்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். பஸ் நம்பர் போன்ற விவரங்களையும் தெரிவித்தார்.
போலீசுக்கு புகார் செய்த பின்பும் சில்மிஷம் தொடர்ந்தது. ஒரு வழியாக கோயம்பேடு ஆம்னி பஸ் நிறுத்தத்துக்கு வந்து பஸ் நின்றது. அங்கு கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சாம்வின் சென்ட், சப்–இன்ஸ்பெக்டர் நதியா தலைமையில் போலீஸ் படை தயாராக காத்திருந்தது.
பஸ் நின்றதும் 2 வாலிபர்களும் வேக வேகமாக பஸ்சில் இருந்து இறங்கி அங்கு தயாராக நின்ற ஆட்டோவில் ஏறி தப்ப முயன்றனர். ஆட்டோ டிரைவரும் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு பெண் டாக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதற்குள் போலீஸ் அங்கு வந்து அவர்களை சுற்றி வளைத்து விட்டது. 2 வாலிபர்களுடன் ஆட்டோ டிரைவரையும் போலீசார் பிடித்துச் சென்றனர்.
நடந்த சம்பவங்களை பெண் டாக்டர் போலீசாரிடம் கண்ணீருடன் விவரித்தார். புகாராகவும் எழுதி கொடுத்தார். அதன் பேரில் போலீசார் பஸ்சின் மாற்று டிரைவரையும் பிடித்து வந்து விசாரித்தனர். பின்னர் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் பெயர் குரு ஷியாம், சரவணன். ஆலங்குடியைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரிகள். குரு ஷியாம் டெல்லியில் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தார். இன்டர்வியூவில் பங்கேற்க டெல்லி செல்வதற்காக ரெயில் ஏற சென்னை புறப்பட்டார். உடன் தனது நண்பர் சரவணனையும் அழைத்து வந்தார்.
கைதான டிரைவர் பெயர் ஞானதுரை திருச்சி மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர். ஆட்டோ டிரைவர் பெயர் சிவகுமார். கோயம்பேடு சேமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர்.
கைதான 4 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 4 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெண் டாக்டர் சுஜா வாலிபர்களின் சில்மிஷத்தால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டார். அவர் புகார் செய்ததும் பஸ் டிரைவர், வாலிபர்களை எச்சரித்து இருந்தால் இந்த சம்பவமே நடந்து இருக்காது. அவர் கண்டிக்க தவறியதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணை இடம்மாறி உட்காரச் சொல்லி இருக்கிறார். பெண்ணுக்கு பாதுகாப்பான இருக்கை அளிக்க தவறியதால் குற்றம் செய்வதற்கு உதவியாக அமைந்து விட்டது. தனியாக வரும் பெண்களின் பாதுகாப்புக்கு பஸ் ஊழியர்களும், பஸ் நிறுவனமும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger