நள்ளிரவில் என் மகளை பலாத்காரம் செய் ..ஒரு தாயின் கொடூர செயல் !
திருமணத்துக்கு மறுத்த 8ம் வகுப்பு மாணவியை நள்ளிரவில் வீடு புகுந்து
பலாத்காரம் செய்த டெய்லர் போலீசில் சிக்கினார். பணம் வாங்கிக் கொண்டு, கதவை
பூட்டி காவல் காத்த கொடூர அம்மாவும் கைது செய்யப்பட்டார். தஞ்சையில் நடந்த
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் கோமதி (43). தஞ்சை ரெட்டிபாளையத்தில்
வசிக்கிறார். கணவர் இறந்துவிட்டார். இவரது மகள் அஞ்சலி (13) அதே பகுதியில்
உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.அதே ஊரை சேர்ந்த டெய்லர்
லட்சுமணன் (27), கோமதிக்கு உறவினர். அஞ்சலியை திருமணம் செய்து கொடுப்பதாக
லட்சுமணனிடம் கோமதி கூறியுள்ளார்.
இதையடுத்து கடந்த 7ம் தேதி திருச்செந்தூரில் ஒரு கோயிலில் திருமணம் நடத்த
ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மைனர் பெண்ணுக்கு திருமணம் நடப்பதை அறிந்து
போலீசார் அங்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தனது திட்டம் நிறைவேறாததால் வெறுப்படைந்த கோமதி, லட்சுமணனுடன் சேர்ந்து
சதித் திட்டம் தீட்டினார். ‘நள்ளிரவில் வீட்டுக்கு வா. என் மகளை பலாத்காரம்
செய்துவிடு. பிறகு வேறு வழியின்றி அவள் உன்னை கல்யாணம் செய்துகொள்வாள்’ என
ஆலோசனை கூறினார். அதற்கு லட்சுமணனும் ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில், கடந்த 9&ம் தேதி இரவு கோமதியும் அஞ்சலியும் வீட்டில்
தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் வந்த லட்சுமணன், கதவை தட்டினார். அவரை
வீட்டுக்குள் அனுப்பிய கோமதி, கதவை வெளிப்பக்கமாக தாழிட்டு கொண்டு வெளியே
காவலுக்கு இருந்துள்ளார். வீட்டுக்குள் சென்ற லட்சுமணன், தூங்கிக்
கொண்டிருந்த அஞ்சலியை எழுப்பினார். கத்திமுனையில் மிரட்டி அவரை
வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.
மறுநாள் காலை இதுபற்றி தனது உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார் அஞ்சலி. விஷயம்
வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும். மாணவியின் எதிர்காலம் பாதிக்கப்படும்
என கருதிய உறவினர்கள், ஒரு வாரமாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல்
தயக்கத்தில் இருந்தனர். ஆனால் தவறு செய்தவர்களை தண்டித்தே தீரவேண்டும் என
சிலர் உறுதியுடன் கூறியதால் உறவினர்கள் உதவியுடன் சைல்டு லைனுக்கு
அஞ்சலியையே தகவல் கூற வைத்தனர்.
சைல்டு லைன் அதிகாரிகள் நேரில் விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இதை
தொடர்ந்து மாணவியை பலாத்காரம் செய்த லட்சுமணனையும் அவருக்கு உடந்தையாக
இருந்த கோமதியையும் போலீசார் இன்று காலை கைது செய்தனர். பணம் வாங்கிக்
கொண்டு பெற்ற மகளை பலாத்காரம் செய்ய வைத்த அம்மாவின் செயல் அப்பகுதி
மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?