Monday, 29 July 2013

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 96 உயர்வு ரூ.21 ஆயிரத்தை தாண்டியது gold rate again increased 21 thousands

சில மாதங்களாக ஜெட் வேகத்தில் விர்ரென உயர்ந்த தங்கம் விலை ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்தை தொட்டது. பின்னர் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் காரணமாக கடந்த ஜூன் மாதம் 28–ந்தேதி ஒரு பவுன் ரூ. 19 ஆயிரத்து 168 ஆக குறைந்தது.


பிறகு படிப்படியாக அதிகரித்து கடந்த 26–ந்தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 984 ஆனது. இந்த நிலையில் இன்று பவுனுக்கு மேலும் ரூ.96 உயர்ந்தது.
அதன் மூலம் பவுன் மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 80 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ரூ.2635–க்கு விற்கிறது.


தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதே முக்கிய காரணமாக கருதப் படுகிறது.
வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.650 அதிகரித் துள்ளது. ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 710 ஆகவும், ஒரு கிராம் ரூ.43.60 ஆகவும் உள்ளது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger