Monday, 29 July 2013

2015 ஆம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் அட்டவணை

11-வது உலக கோப்பை ஒருநாள்
போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
(ஐ.சி.சி) அனுமதியுடன்
ஆஸ்திரேலியா மற்றும்
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள்
இணைந்து நடத்துகிறது. இந்த போட்டி 2015-
ம் ஆண்டில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில்
நடைபெறுகிறது.
14 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியின் லீக்
மற்றும் நாக்-அவுட் ஆட்டங்கள்
ஆஸ்திரேலியா மற்றும்
நியூசிலாந்து நாடுகளில் சரிசமமான
எண்ணிக்கையில் நடைபெறும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள்
இடம் பெறும் பிரிவுகள், அணிகள் மோதல்
அட்டவணை, ஆட்டங்கள் நடைபெறும் இடம்
ஆகியவை குறித்து சர்வதேச கிரிக்கெட்
கவுன்சில் மற்றும் ஆஸ்திரேலியா,
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள்
கலந்து ஆலோசித்து முடிவு செய்து இருக்கின்றன.
போட்டி அட்டவணை வெளியிடும்
நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை)
ஒரே நேரத்தில் மெல்போர்ன் (ஆஸ்திரேலியா),
வெலிங்டன் (நியூசிலாந்து) ஆகிய இடங்களில்
நடைபெறுகிறது. இந்திய
நேரப்படி அதிகாலை 5.30
மணிக்கு அட்டவணை வெளியாகிறது.
அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சியில்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்,
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கிரிக்கெட்
வாரிய நிர்வாகிகள், இன்னாள் மற்றும்
முன்னாள் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மெல்போர்னில் நடைபெறும்
அட்டவணை அறிவிப்பு நிகழ்ச்சியில் ஐ.சி.சி.
துணைத்தலைவர் முஸ்தபா கமால்,
தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன்,
உள்ளூர் போட்டி அமைப்பு குழு சேர்மன்
ரால்ப் வாட்டர்ஸ், தலைமை செயல்
அதிகாரி ஜான் ஹார்டென் ஆகியோரும்,
வெலிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில்
ஐ.சி.சி.தலைவர் ஆலன் ஐசக்,
நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர்
தெரஸ் வால்ஷ் ஆகியோர் பங்கேற்பார்கள்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger