Sunday 7 July 2013

கல்யாண மன்னன் - 39 வயதில் 11 கல்யாணம் , 25 பெண்களிடம் உல்லாசம்

ஆயிரம்
பொய்யை சொல்லியாவது ஒரு திருமணம்
செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.
ஆனால்
எத்தனை பொய்யை சொல்லி எத்தனை பெண்களை வேண்டுமானாலும்
திருமணம் செய்ய முடியும்
என்று நிரூபித்து இருக்கிறார் ஒரு கல்யாண
மன்னன். வெங்கட்ராவ் (39). இவர்தான் அந்த
கில்லாடி கல்யாண மன்னன்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம்
கொண்டபி என்ற கிராமம் தான் இவரது சொந்த
ஊர். கூலி வேலை செய்து வந்த பெற்றோர்
பிழைப்பு தேடி நல்கொண்டா பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.
வறுமையின் பிடியில் சிக்கி தவித்த
வெங்கட்ராவ் நண்பர்களுடன் ஊர் சுற்றினார்.
வழிப்பறி, திருட்டு போன்ற செயல்களில்
ஈடுபட்டதால் கையில் தாராளமாக பணம்
புரண்டது. இதனால் வெங்கட்ராவின்
வாழ்க்கை ‘ஸ்டைல்’ மாறியது.

கழுத்து நிறைய நகைகள், கையில் தாராளமான
பணத்துடன் டிப்–டாப்பாக திடீர் பணக்காரராக
வலம் வந்த
வெங்கட்ராவை ஊரே திரும்பி பார்த்தது.
வெங்கட்ராவின் அக்காள் அவரது மகள்
மங்கம்மாளை தம்பிக்கு திருமணம்
செய்து கொடுக்க விரும்பினார். குடும்பத்தினர்
ஏற்பாட்டில் 2001–ல்
மங்கம்மாளை தாலி கட்டி மனைவியாக்கினார்.
ஒரே மனைவியுடன்
வாழ்ந்தது அவருக்கு ‘போர்’ அடித்துவிட்டது.
எப்போதும் சொகுசுகாரில் வலம் வந்த
வெங்கட்ராவ் தன்னை ஒரு ‘பில்டர்’
என்று அறிமுகப்படுத்தி நட்பு வட்டாரத்தை விரிவடைய
செய்து கொண்டார்.
2005–ல் திருப்பதியை சேர்ந்த சைலஜா என்ற
பெண்ணை 2–வதாக திருமணம் செய்தார்.
2006–ல் கம்மம் மாவட்டம்
காந்தி நகரை சேர்ந்த லட்சுமி என்ற
பெண்ணை திருமணம் செய்தார். லட்சுமிகரமாக
இருந்த லட்சுமி மீது வெங்கட்ராவுக்கு மற்ற
மனைவிகளை விட கொஞ்சம்
கூடுதலாகவே மோகம் இருந்தது. இதனால்
சகஸ்ரா என்ற பெண் குழந்தையும், சரண் என்ற
ஆண் குழந்தையும் பிறந்தது.
அழகான பெண்களை நைசாக பேசி ஆடம்பர
ஓட்டல்களுக்கு அழைத்து சென்று விருந்து கொடுப்பது,
விலை உயர்ந்த
பரிசு பொருட்களை வாங்கி கொடுப்பது,
இனிமையாக
பேசுவது ஆகியவற்றை பார்த்து பல பெண்கள்
வெங்கட்ராவின் வலையில் சிக்கினார்கள்.
கம்மம் மாவட்டம் மகிராவை சேர்ந்த ராதா,
விஜயவாடாவை சேர்ந்த லெட்சுமி உள்பட 10
பெண்களை திருமணம் செய்து கொண்டார்.
ஒவ்வொரு ஊரிலும்
ஒவ்வொரு மனைவியை குடியமர்த்தினார்.
குடும்ப செலவுக்காக திருட்டு தொழிலிலும்
தீவிரமாக ஈடுபட்டார். கரீம் நகரில் பில்டர்
ஒருவரை ஏமாற்றி ரூ.5 லட்சம்
கொள்ளையடித்தார். கடப்பாவில்
ஒருவரை ஏமாற்றி ரூ.10 லட்சம்
மோசடி செய்தார்.
விஜயவாடா நாராயணபுரத்தில்
ஒரு காரை திருடினார்.
திருட்டு தொழிலில் பணம்–பல
மனைவிகளுடன் உல்லாச
வாழ்க்கை என்று வாழ்க்கையை அனுபவித்து கொண்டிருந்த
வெங்கட்ராவ் ஓங்கோவை சேர்ந்த பவித்ரா என்ற
பெண்ணை பார்த்ததும் அவர் மீதும் காதல்
கொண்டார். 11–வதாக அவரை திருமணம்
செய்ய திட்டமிட்டார். ஆனால் வெங்கட்ராவின்
ஆசை வார்த்தைகளுக்கு பிடி கொடுக்காமல்
நழுவி சென்றார் பவித்ரா.
ஆனால் பவித்ராவை எப்படியும்
அடைந்தே தீருவது என்ற வெறித்தனத்தில்
இருந்த வெங்கட்ராவ் அவரை ஒரு காரில்
கடத்தி சென்றார். வழியில் கார்
டிரைவரை பிடித்து வெளியே தள்ளிவிட்டு சென்று விட்டார்.
மகளை கடத்தியதாக பவித்ராவின்
தந்தை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார்
செய்தார்.
போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
அப்போது ஒரு ஓட்டலில்
வைத்து வெங்கட்ராவை கைது செய்து பவித்ராவை மீட்டனர்.
அவரிடம் இருந்து சொகுசு கார், ரூ.10 லட்சம்
மதிப்புள்ள நகைகளையும் பறிமுதல்
செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரித்த போதுதான்
ஏற்கனவே 10 பெண்களை திருமணம்
செய்தது தெரிய வந்தது. 14
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதையும்
ஒத்து கொண்டுள்ளார். தொடர்ந்து போலீசார்
விசாரித்து வருகிறார்கள்

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger