சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க.
ஆட்சி நடைபெற்று வருகிறது.
அம்மாநில முதல் மந்திரி ரமண் சிங் ரூ. 1
கோடி லஞ்சம் வாங்கிய சி.டி.
ஆதாரத்தை அம்மாநில காங்கிரஸ்
கட்சி வெளியிட்டுள்ளது.
2006-ம் ஆண்டு பொதுமக்களின்
பணத்தை மோசடி செய்த
இந்திரா பிரியதர்ஷினி மகளிர்
கூட்டுறவு வங்கியின் உரிமத்தை மத்திய
ரிசர்வ் வங்கி ரத்து செய்து உத்தரவிட்டது.
போலியான நிரந்தர வைப்பு நிதி பத்திரம்,
பணவிடை சீட்டு ஆகியவற்றை தயாரித்தும்,
தகுதியற்ற நபர்களுக்கு போலி ஆவணங்களின்
மீது கடன் வழங்கியும் மக்களின் பணம் ரூ. 54
கோடியை மோசடி செய்ததாக அந்த வங்கியின்
மேனேஜர் மற்றும் இயக்குனர்கள்
ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவ்விவகாரத்தில்
இருந்து தங்களை விடுவிக்கும்படி
கைதானவர்கள் சத்தீஸ்கர் முதல்
மந்திரியை அனுகியுள்ளனர்.
இந்த சிக்கலில் இருந்து அவர்களை காப்பாற்ற
முதல் மந்திரி ரமண் சிங்,
அவரது அமைச்சரவையை சேர்ந்த 2 மந்திரிகள்
மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் தலா ரூ.
1 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம்
சாட்டப்பட்ட ஒருவன் வாக்குமூலம் அளித்த
‘ஆடியோ சி.டி.’ ஆதாரத்தை சத்தீஸ்கர் மாநில
காங்கிரஸ் நிர்வாகிகள் பூபேஷ் பாகல்,
ஷைலேஷ் நிதின் திவேதி ஆகியோர்
நேற்று பத்திரிகையாளர் சத்திப்பின்
போது வெளியிட்டனர்.
இந்த ஆதாரத்தின் அடிப்படையில் ரமண் சிங்
மற்றும் அவரது அமைச்சரவையின் மந்திரிகள்
மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்
எனவும் அவர்கள் வலியுறுத்தினர்
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?