Thursday 27 June 2013

எனது எம்.பி. பதவியை பயன்படுத்தி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து மீண்டு வருவேன்: கனிமொழி பேட்டி kanimozhi said i will be recovered from spectrum case

 எனது எம்.பி. பதவியை பயன்படுத்தி

ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து மீண்டு வருவேன்: கனிமொழி பேட்டி kanimozhi said i will be recovered from spectrum case


டெல்லி மேல்சபை தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கனிமொழி 31 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 2-வது முறையாக எம்.பி. ஆகி இருக்கிறார். வெற்றிச்சான்றிதழுடன் சி.ஐ.டி. நகரில் உள்ள வீட்டுக்கு திரும்பியதும் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார். அப்போது அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி:- இந்த வெற்றியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?



பதில்:- எனது வெற்றிக்காக அப்பாவும் (கருணாநிதி), அண்ணனும் (மு.க.ஸ்டாலின்) கடுமையாக உழைத்தார்கள். எனது வெற்றிக்கு மு.க.ஸ்டாலினின் பங்களிப்பு மிக அதிகமானது. உண்மையில் சொல்வதென்றால் இந்த வெற்றி என்னை விட மு.க.ஸ்டாலினுக்கு உரித்தானது.

கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்கள் என்று பேசப்பட்டது. அதில் தோல்வி ஏற்படும் என்ற பயத்தால் மேல் சபை தேர்தலில் போட்டியிட்டீர்களா?

பதில்:- கட்சியும், கட்சி தலைமையும் என்னை போட்டியிட கட்டளையிட்டதால், போட்டியிட்டேன். மனுதாக்கல் செய்த போதிலும் அப்போது எங்கள் வெற்றி உறுதியாக இல்லை. எங்களிடம் 23 எம்.எல்.ஏக்கள் பலம்தான் இருந்தது. கட்சியின் முடிவை ஏற்று வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் போட்டியிட்டேன்.

கேள்வி:- போட்டி இவ்வளவு கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்த்தீர்களா? காங்கிரஸ் தயவால் தானே வெற்றி பெற முடிந்துள்ளது.

பதில்:- கலைஞர் சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ஆதரவு கேட்டு எல்லா கட்சிகளிடமும் பேசி வருவதாக குறிப்பிட்டார். எனக்கு ஆதரவளித்த அனைத்து கட்சியினருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். டெல்லி மேல்சபை தேர்தலை தவிர வேறு எந்த விசயங்கள் பற்றியும் மற்ற கட்சிகளுடன் விவாதிக்கவில்லை.

கேள்வி:- 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இருப்பதால் சிலர் விமர்சிக்கிறார்கள். தீர்ப்பு வரும்வரை காத்து இருந்து தேர்தலில் போட்டியிட்டிருக்கலாமே?

பதில்:- அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை என் மீதான குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இந்த வழக்கில் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபித்து வெளியே வருவேன். வழக்கு முடிந்த பிறகு தான் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த மாதிரி வழக்குகள் நிலுவையில் இருந்த போதே தேர்தலில் போட்டியிட்ட எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள்.

கேள்வி:- ஈழ தமிழர் பிரச்சினை காரணமாகத் தான் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியே வந்தது. காங்கிரஸ் ஆதரவை பெற்றதன் மூலம் ஈழத்தமிழர் பிரச்சினையை கைவிட்டு விட்டதாக சொல்லலாமா?

பதில்:- தி.மு.க எந்த கூட்டணியில் இருந்த போதும் ஈழத்தமிழர் பிரச்சினையை விட்டுக் கொடுத்தில்லை. தொடர்ந்து இலங்கை தமிழர்களின் மறு வாழ்விற்காக குரல் கொடுத்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இலங்கை தமிழர்கள் பிரச்சினையை தி.மு.க விட்டுக் கொடுத்ததில்லை. எங்கள் கட்சித் தலைவர்கள் யாரிடமும் இலங்கை தமிழர் பிரச்சினையை விட்டு விடுவதாக கூறியதில்லை. தி.மு.க.வை எதிர்க்கும் சிலரது கற்பனையான குற்றச்சாட்டு இது.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger