Thursday, 27 June 2013

சச்சினை விட மிகச் சிறந்த வீரர் குக் - பீட்டர்சன் பாராட்டு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அதிக
ரன்கள் குவித்தவர் இந்திய ஜாம்பவான் சச்சின்
தெண்டுல்கர். 40 வயதான இவர் இதுவரை 198
டெஸ்டில் விளையாடி 51 சதம் உள்பட 15,837
ரன்கள் சேர்த்து இருக்கிறார். 28 வயது நிரம்பிய
இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் 92
டெஸ்டில் விளையாடி 25 சதம் உள்பட 7,524
ரன்கள் எடுத்துள்ளார். அதாவது டெஸ்டில்
அதிக ரன்கள் விளாசியவர்களின் பட்டியலில்
தெண்டுல்கர் முதலிடத்தில் நீடிக்க, குக் இந்த
வகையில் 31-வது இடத்தில் உள்ளார்.

இந்த நிலையில் தெண்டுல்கரின் டெஸ்ட்
சாதனையை அலஸ்டயர் குக்கால் முறியடிக்க
முடியும் என்று இங்கிலாந்து வீரர் கெவின்
பீட்டர்சன் ஆரூடம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பீட்டர்சன் அளித்த
ஒரு பேட்டியில்,
‘என்னை பொறுத்தவரை இங்கிலாந்து அணியை
வழிநடத்த சரியான நபர் குக் தான்.
எங்களுக்காக தனது பணியை மிகச்சிறப்பாக
செய்து வருகிறார். தொடர்ச்சியாக ரன்
குவித்து வரும் அவரது ஆட்டம் இன்னும்
மென்மேலும் மேம்பட்டுக் கொண்டே இருக்கும்.
அப்போது டெஸ்ட் அரங்கில்
நிர்ணயிக்கப்பட்டுள்ள
ஒவ்வொரு சாதனைகளையும் முறியடிப்பார்.
குறிப்பாக இங்கிலாந்தின்
அனைத்து சாதனைகளையும்
தகர்த்து விடுவார். டெஸ்டில் அவர்
இதுவரை எடுத்துள்ள ரன்கள் மற்றும்
அவரது வயதை வைத்து பார்க்கும் போது,
தெண்டுல்கரின் அதிக ரன்
சாதனையை முறியடிப்பதை இலக்காக
கொண்டு அவர் சென்று கொண்டிருக்கிறார்.
அதை நிகழ்த்த அவருக்கு நல்ல
வாய்ப்புள்ளது’ என்றார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger