Saturday, 9 March 2013

கற்பழிப்பு நகரம் டெல்லியில் மீண்டும் கல்லூரி மாணவி காரில் கற்பழிப்பு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் பாதிக்கப்பட்ட மாணவி ஒரு வாரத்துக்கு பின் இறந்ததால் சோகம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த முற்றுகை போராட்டம் டெல்லியை உலுக்கியது.
இதைடுத்து கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு எதிராக கடும் சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பிறகும் டெல்லியில் கற்பழிப்பு தொடர்கிறது.
டெல்லி மட்டும் அல்ல புறநகர் பகுதியான நொய்டா, குர்கான், நகரங்களிலும் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் புள்ளி விவரம் வெளியானது.
இந்த நிலையில் நேற்று பட்டப்பகலில் நொய்டாவில் கல்லூரி மாணவி 4 பேர் கும்பலால் கடத்தி கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
டெல்லி அருகே நொய்டாவையொட்டியுள்ள பாதல்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி. இவர் தினமும் கோச்சிங் கிளாஸ் சென்று வந்தார். நேற்று காலை 11 மணிக்கு ஸ்கூட்டியில் கோச் சிங் கிளாஸ் சென்றார்.
துரை என்ற இடத்தில் வந்தபோது பின்னால் வந்த கார் மாணவியின் ஸ்கூட்டி மீது மோதி இடித்தது. இதில் நிலை குலைந்த மாணவி தடுமாறி கீழே விழுந்தார். உடனே காரில் இருந்த 4 பேர் கீழே இறங்கி மாணவியை காரில் தூக்கிப்போட்டு கடத்திச் சென்றனர்.
இதை அருகில் இருந்த கிராம வாசிகள் பார்த்து ரோட்டுக்கு ஓடி வந்தனர். அதற்குள் மாணவியுடன் கார் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது. உடனே கடத்தல்காரர்களை பிடிக்க கோரி மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் வர தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் வாகனங்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். அதன்பிறகு அங்கு வந்த போலீசார் கடத் தல்காரர்களை தேடிக் கண்டு பிடித்து மாணவியை மீட்பதாக உறுதி அளித்தனர்.
ஆனால் மாலைவரை மாணவியை மீட்க முடியவில்லை. இதற்கிடையே காசியாபாத் ஹிட்டன் ஆற்றங்கரையில் மாணவி மயங்கிய நிலையில் கிடந்தார். அவராகவே மயக்கம் தெளிந்து காசியாபாத் போலீஸ் நிலையம் சென்று நடந்த விவரங்களை தெரிவித்தார்.
மாணவி கொடுத்த புகாரில்தான் ஸ்கூட்டியில் சென்ற போது பின்னால் காரில் வந்த 4 பேர் தனது ஸ்கூட்டியை இடித்து கீழே தள்ளி தன்னை காரில் கடத்தியதாகவும், மயக்க பொடி தூவியதில் தனக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
மயக்கம் தெளிந்து பார்த்தபோது ஆற்றங்கரையில் கிடந்தாகவும் மாணவி கூறினார். காரில் கடத்திய கும்பல் மாணவியை காரிலேயே மயக்கம் அடைய செய்து கற்பழித்து ஆற்றங்கரையில் வீசிச்சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதைடுத்து மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியை கடத்தி கற்பழித்த கும்பல் தலைமறைவாகி விட்டது.
அவர்களைப் பிடிக்க டெல்லி, நொய்டா மற்றும் உத்தரபிரதேசத்தின் பல இடங்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவி கற்பழிக்கபட்டாரா என்பதை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என்றனர்.
வழக்கமாக மாணவி கோச்சிங் கிளாஸ் செல்லும்போது தன்னுடன் செல்போனும், உறவினர் ஒருவரையும் உடன் அழைத்து செல்வது வழக்கம். நேற்று அவருடன் உறவினர் செல்லவில்லை. செப்போனையும் எடுத்து செல்லவில்லை. இதனால் அவரால் ஆபத்து நேரத்தில் தகவல் தெரிவிக்க முடியவில்லை,

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger