Sunday 24 February 2013

இத்தாலி முன்னாள் பிரதமர் முன் மேலாடை இன்றி பெண்கள்

இத்தாலியில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில், ஏற்கனவே 3 முறை பிரதமராக இருந்து செக்ஸ் மற்றும் ஊழல் வழக்கில் சிக்கி பதவி இழந்த சில்வியோ பெர்லஸ் கோனி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியை சேர்ந்த பியர் லுகி பெர்சானி களத்தில் உள்ளார்.

தற்போது இத்தாலியின் பொருளாதார நிலை மிகவும் வீழ்ச்சி அடைந்த நிலையில் உள்ளது. இந்த தேர்தல் மூலம் அமையும் புதிய அரசால் தான் அந்த நாட்டின் பொருளாதார சூழ்நிலை சீரடையும் என்ற நிலை உள்ளது. எனவே, இந்த தேர்தலில் ஓட்டு போட மக்கள் நீண்ட “கியூ” வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இந்த நிலையில் மிலன் நகரில் ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் ஓட்டு போட நீண்ட வரிசையில் மக்கள் நின்று கொண்டிருந்தனர். அங்கு ஓட்டு போட முன்னாள் பிரதமர் பெர்லஸ் கோனியும் வந்திருந்தார். அப்போது, மேலாடை அணியாத 3 பெண்கள் திடீரென அவர் முன்பு ஓடி வந்து நின்றனர்.

சில்வியோ பெர்லஸ் கோனியே இந்த நாட்டின் பிரதமர் என வாழ்த்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் விரைந்து வந்து அந்த 3 பெண்களையும் கைது செய்து இழுத்து சென்றனர். விசாரணையில், அவர்கள் உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு பெண்கள் அமைப்பினர் என தெரிய வந்தது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger