ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்த சேட்டு என்ற விஜய் (வயது 30) பாலிடெக்னிக் படித்து விட்டு திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
அணைக்கட்டு அடுத்த பிச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் இவரது மனைவி சசிகலா (வயது 45). இவர்களுக்கு ஜோதி என்ற மகள் உள்ளார். நாராயணபுரத்தை சேர்ந்த தினேஷ்க்கு இவரை திருமணம் செய்து கொடுத்தார்.
கடந்த 20 ஆண்டுக்கு முன்பு பன்னீர்செல்வம் இறந்துவிட்டார். இதனால் திருப்பூருக்கு சென்று பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த சேட்டுவுக்கும் சசிகலாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
பின்னர் சசிகலாவை சேட்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருப்பூரில் வசித்து வந்தனர். மின்வெட்டு காரணமாக தற்போது அங்கு வேலை இல்லாததால் ஆம்பூர் பெரியாங்குப்பத்துக்கு வந்தனர்.
இதற்கிடையில் சசிகலாவின் மகள் ஜோதிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உனது அம்மா வயது குறைந்தவரை திருமணம் செய்துள்ளார். இது சரியில்லை என்று கூறி தினேஷ், ஜோதியை தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இதனால் மனமுடைந்த சசிகலா தன்னை சேட்டுவிடம் இருந்த பிரித்து வைக்ககோரி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து பேசினர்.
அப்போது சேட்டு சசிகலா இல்லாமல் என்னால் வாழமுடியாது எங்களை பிரித்து விடாதீர்கள் என்று போலீசாரிடம் மன்றாடினார். போலீசார் அவரை சமாதானம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?