Saturday, 5 May 2012

பின் லாடன் கொல்லப்படு ஒராண்டின் பின்னர்????



ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டு இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இன்று அது இரு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று இன்னும் அவரது இயக்கமான அல் கெய்தா அழிவு விளைவிக்கக்� ��ூடிய ஒரு தீவிரவாத இயக்கமா? மற்றது ஒசமா பின் லாடன் கொலை பராக் ஒபாமாவின் வெற்றிக்கு வழிவகுக்குமா? பின் லாடன் கொல்லப்படதைத் தொடர்ந்து இன்னொரு அல் கெய்தா தலைவர் அன்வர் அல் அவ்லாக்கியும் கொல்லப்பட்டார். இவர் அமெரிக்காவில் பிறந்த இசுலாமிய மதபோதகர். பின்னர் அதியா அப் அல் ரஹ்மான் என்ற ஒரு முக்கிய அல் கெயதா தலைவரும் கொல்லப்பட்டார்.

பின் லாடன் கொலைக்கு பராக் ஒபாமா ப ெருமைப்பட முடியாது அவரது இடத்தில் ஜிம்மி காட்டர் இருந்திருந்தாலும் ஒசாமா பின் லாடனைக் கொல்ல உத்தரவிட்டிருந்திருப்பார் என்கிறார் பராக் ஒபாமாவுடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவிருப்பவராகக் கருதப்படும் மிட் ரூணி. பின் லாடன் கொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு நாளில் பராக் ஒபாமா ஆப்கானிஸ்த்தானிற்கு திடீர்ப் பயணத்தை மேற்கொண்டு அங்கிருந்த அமெரிக்கர்களு� �்கு உரையாற்றவிருக்கிறார். இது அவரது தேர்தல் உத்தி. இனி வரும் நாட்களில் அமெரிக்கத் தேர்தல் களத்தில் பின் லாடன் கொலை பெரிதாக அடிபடலாம்.

பின் லாடன் இருக்கும் போதே அவர் தனது இயக்கத்தை ஒரு franchise இயக்கமாக மாற்றிவிட்டார்.  அதன் படி அல் கெய்தாவின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தமது நடவடிக்கைகளை தமது எண்ணப்படி மேலிடத்தின் கட்டளைக்குக் காத்திராமல் செய்ய முடியும். அமெரிக� ��க இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுக்குப் பின்னர் பின் லாடன் கடுமையாகத் தேடப்பட்டதால் அவரால் தனது இயக்கத்தினருடன் தொடர்பாடல்கள் மேற்கொள்வது கடினம் என்ற நிலை ஏற்பட்டது. இதைச் சமாளிக்க தனது இயக்கத்தை ஒரு franchise இயக்கமாக மாற்றியிருந்தார் பின் லாடன். பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் இந்த franchise இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை குறைந்து விட்டது. அல் கெய்தாவின் தற்போதைய தலைவரான � ��ன்வர் அல் அவ்லாக்கி இந்த இயக்கங்களை ஒருங்கிணைத்து செயற்படுத்த மிகுந்த சிரமத்தை எதிர் நோக்குகிறார். சோமலியா, யேமன், ஈராக் போன்ற நாடுகளில் செயற்படும் அல் கெய்தாவினர் அன்வர் அல் அவ்லாக்கியின் தலமையில் திருப்தியடையவில்லை. அரபு வசந்தத்தில் ஈடுபட்ட போராளிகள் அல் கொய்தாவின் கொள்கைகளால் கவரப்பட்டவர்களுமல்ல. அமெரிக்க எதிர்ப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டவர்களுமல்ல� ��்.

அய்மன் அல் ஜவாஹ்ரி  Ayman al-Zawahri தற்போது அல் கெய்தாவின் தலைவராகக் கருதப்படுகிறார். அவரது தற்போதைய பிரச்சனை அமெரிக்கவிற்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதிலும் பார்க்க  அமெரிக்க ஆளில்லா விமானங்களிடமிருந்து தன்னையும் தனது அமைப்பையும் பாதுகாப்பதே. ஆப்கானிஸ்த்தானில் பதுங்கும் அல் கெய்தா Al Qaeda in the Arabian Peninsula (AQAP) அரபு குடாநாட்டில் அல் கெய்தா என்னும் பெயரில் யேமனில் வளர்� �்து வருகிறது. யேமனில் அதிக ஆளில்லா விமானத் தாக்குதல் நடாத்த அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ பராக் ஒபாமாவிடம் அனுமதி கோரியுள்ளது.

இலண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் பாணியில் தற்கொலை விமானத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் ஒலிம்பிக் மைதானக் கூரைகளில் ஆறு இடங்களில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இது அல் கெய்தா பற்றிய பயம் இன்னும் மேற்கு நாடுகளை ஆட்டிப் படைக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் 2011-ம் ஆண்டு ஜூலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏயின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலருமான லியோன் இ பானெற்றா பாக்கிஸ்த்தான் பயணம் மேற் கொண்டிருந்தபோது "We are within reach of strategically defeating al-Qaeda" தந்திரோபாய ரீதியில் நாம் அல் -கெய்தாவைத் தோற்கடிக்கும் நிலையை அண்மித்து விட்டோம்" என்றார். ஆனால் 2012 ஏப்ரல் 15 திகதி ஆப்கானிஸ்த்தானில் பல இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் அவரது கூற்றை மறுதலித்தன.

அல் கெய்தா பலவீனப்பட்டுவிட்டது என்று மேற்கு நாடுகளின் படைத்துறை ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்த போதும் மேற்கு நாடுகளுக்கு குறிப்பாக ஐக்கிய அமெரிக்கவிற்கு எதிரான இசுலாமியர்களின் எதிர்ப்பு உணர்வு மாறியதாகவோ அல்லது குறைந்ததாகவோ இல்லை. அதே வேளை அல் கெய்தவிற்கு அமெரிக்க ஆதரவு இசுலாமிய நாடுகளான எகிப்து, ஜோர்தான், துருக்கி மற்றும் பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் குறைவாகக் காணப்படுவதாக வாஷிங்டன் போஸ்ற் பத்திரிகையின் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பின் லாடனின் கடைசிக் கனவு 9-11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் போல் அமெரிக்கவின் பொருளாதாரத்தி� ��்கு நெற்றியடி கொடுக்கக் கூடிய ஒரு தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே. பின் லாடன் இறந்து ஒரு ஆண்டு கடந்தும் அக்கனவை அல் கெய்தா நிறைவேற்றவும் இல்லை பின் லாடனின் கொலைக்குப் பழிவாங்கவுமில்லை. இது அல் கெய்தாவின் பலவீனத்தின் எடுத்துக் கட்டா?

http://tamilsexstorys2u.blogspot.com


0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger