Friday 20 April 2012

ஸ்டாலினை வரவேற்கனும்னு விதி எதுவும் கிடையாது: மு.க. அழகிரி காட்டம்!



Saturday, April, 21, 2012
மதுரை::தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகன்களாக மு.க. ஸ்டாலினுக்கும் மு.க. அழகிரிக்கும் இடையேயான மோதல் கட்சியில் பிளவை ஏற்படுத்தும் நிலைமையை உருவாக்கியுள்ளது.

மதுரையில் கடந்த 15-ந் தேதி தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சியை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்தினார். புறநகர் மாவட்டத்திலும், மாநகர் மாவட்டத்திலும் தனித்தனியாக நேர்காணல் நடந்தது. அதன்பின் தமிழக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து அன்று மாலையில் பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. அழகிரியின் உத்� �ரவின் பேரில் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதால் 17 பேருக்கு விளக்கம் கேட்டு தி.மு.க. தலைமை நோட்டீசு அனுப்பியது.

இந்த நிலையில் சீன நாட்டுக்கு சென்று இருந்த மு.க.அழகிரி நேற்று மதுரை வந்தடைந்தார்.

ஸ்டாலினை வரவேற்கனும்னு விதி இல்லை...

மதுரை விமான நிலையத்தில் மத்திய மந்திரி மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:

கேள்வி: � �துரையில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடந்ததே?

பதில்: அது பற்றி ஒன்றும் தெரியாது. நான் அப்போது சீனாவில் இருந்தேன். இப்போதுதான் வருகிறேன். நேர்காணல் பற்றி எனக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

கேள்வி: மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத தி.மு.க. நிர்வாகிகள் 17 பேருக்கு விளக்கம் கேட்டு தலைமை கழகம் நோட்டீசு அனுப்பியுள்ளதே?

ப� ��ில்: இ ப்போதுதான் மதுரைக்கு வந்துள்ளேன். எனவே அதுபற்றியும் எனக்கு தெரியாது.

கேள்வி: மதுரையில் தி.மு.க. நிர்வாகிகள் 17 பேரும் ரகசியமாக கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறதே?

பதில்: இதுபற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. மேலும் விசாரித்த பின்னர் எதுவும் சொல்ல முடியும்

கேள்வி: மதுரை வந்த மு.க.ஸ்டாலினை தி.மு.க.வினர் யாரும் வரவேற்கவில்லையே?

பதில்: யாரையும் வரவேற� �க வேண்டும் என்ற சட்டம் தி.மு.க.வில் இல்லை'' என்றார் அவர்.

அழகிரி ஆதரவாளர்கள் அதிரடி பதில்

இதனிடையே மு.க.அழகிரியை முன்னிலைப்படுத்தாததால், ஸ்டாலின் நிகழ்ச்சிகளை புறக்கணித்தோம் என்று தலைமை கழகத்தின் நோட்டீசுக்கு மதுரை மாநகர் தி.மு.க.வினர் பதில் அளித்து உள்ளனர்.

மதுரை தி.மு.க. நிர்வாகிகள் அனுப்பியுள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

15-4-2012-ம் தேதி, இளைஞரணி நேர் காணல் நிகழ்ச்சி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து மதுரை மாநகர் மாவட்ட தி.மு.கழகம் சார்பாக 7-4-2012 அன்று பெத்தானியாபுரம் லட்சுமி திருமண மகாலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் மத்திய அமைச்சரும் தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி வெளிநாடு சென்றுள்ள நிலையில் ஏன் இந்த கூட்டத்தை அவசரமாக நடத்த வேண்டும். அவர் மதுரையில் இருக்கும் நாளில்தான் இந்த கூட்டத்த ிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவர் கலந்து கொண்டால்தான் இந்த நிகழ்ச்சியில் இளைஞர்களும் பெருமளவில் எழுச்சியோடு கலந்து கொள்வார்கள் என்று வலியுறுத்தப்பட்டது.

அழகிரி புறக்கணிப்பு

ஆனால் திடீரென்று எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, கூட்டம் திட்டமிட்ட தேதியில்தான் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மு.க.அழகிரியின் படத்தையும், பெயரையும் போடாமல் அழை� �்பிதழ்களும், நோட்டீசுகளும் மிக வேகமாக அச்சிடப்பட்டன.

மு.க.அழகிரி மற்றும் மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் புறக்கணித்து விட்டு, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இளைஞரணி அமைப்பாளர் ஜெயராமின் தன்னிச்சையான முடிவால்தான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை.

மதுரையில் கடந்த 30 ஆண்டுகளாக எந்த பதவியும் எதிர்பார்க்காமல் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் ப� �ியாற்றிய மு.க.அழகிரியை முன்னிலைப்படுத்ததால் இளைஞர் அணி நேர்காணல் மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மனநிலை எங்களுக்கு உருவாகவில்லை. அதனால் கூட்டத்தைப் புறக்கணித்தோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


http://kannottam.blogspot.com




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger