Friday, 20 April 2012

போராளிகள் புலி இடதுசாரி அரசியலில் இணைந்து கொள்ள வேண்டும் - பிரேம்குமார் குணரட்னம்!



Saturday, April, 21, 2012
இலங்கை::முன்னாள் புலி போராளிகள் இடதுசாரி அரசியலில் இணைந்து கொள்ள வேண்டுமென முன்னணி சோசலிச கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பிரேம்குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் புலி போராளிக ள் இனவாத அடிப்படையில் செயற்படாது, செயற்பாட்டு அரசியலில் முனைப்பு காட்டுவதனையே தமது கட்சி விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் மட்டுமே கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியலில் நாட்டமுள்ள எந்தத் தரப்பினரும் தமது கட்சியில் இணைந்து கொள்ள முடியும் எனவும் எவ்வித தடையும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள� �ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி. மற்றும் புலிகள் உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமது கட்சியில் இணைந்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


http://kannottam.blogspot.com




0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger