
தனக்கு எதிராக செய்தார் என்று கூறி சசிகலாவையும், அவரது குடும்பத்தாரையும் சில மாதங்களுக்கு முன்பு நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் சில நாட்களுக்கு முன்பு திடீரென எனக்கு அக்காத ான் முக்கியம், உறவினர்கள் தேவையில்லை. அக்காவுக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கும் துரோகம் செய்தவர்களே என்று உருக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டார் சசிகலா.
இதனால் உருகிப் போன ஜெயலலிதா, சசிகலாவின் அறிக்கையை ஏற்று அவரை மீண்டும் சேர்த்துக் கொள்ள சம்மதித்தார். இதையடுத்து மீண்டும் போயஸ்தோட்டத்துக்குள் புகுந்தார் சசிகலா. அவரும், ஜெயலலிதாவும் அப்போது சந்தித்துக் கொண்டது உருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஜெயலலிதாவும், சசிகலாவுமாக சேர்ந்து கோட்டூர்புரம் பிள்ளையார் கோவிலுக்குச் சென்றனர். அங்கு அரை மணி நேரம் இரண் டு பேரும் சேர்ந்து மனமுருக சாமி கும்பிட்டனர்.
http://tamil-paarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?